சலூனில் முடிவெட்டும் பட்டதாரிப் பெண்! அப்பகுதியில் பரபரப்பு .


திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு உட்பட்ட மேற்குபல்லடம் முனியப்பன்கோயில் வீதியை சேர்ந்த தங்கவேலு மகள் தேவி(30). பிகாம் பட்டதாரியான இவர், அங்கு சலூன் கடை நடத்தி வருகிறார். ஆண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் முடிவெட்டுகிறார்.ஷேவிங் செய்கிறார்.

 இவரது தொழில் நேர்த்தியை கேள்விப்பட்டு ஏராளமானோர் வாடிக்கையாளராகி உள்ளனர். பட்டதாரி பெண் தைரியமாக சலூன் தொடங்கி இருப்பது இப்பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இதுபற்றி தேவி கூறியதாவது: அரசு வேலைக்கு பலமுறை முயன்றும் கிடைக்கவில்லை. குடும்ப வறுமை வாட்டியது.தந்தை சர்க்கரை நோயாளி என்பதால், தந்தையின் தொழிலை கையில் எடுத்தேன். 
சிறுவயதில் இருந்தே அவரது பணியை பார்த்து வந்த எனக்கு தற்போது கை கொடுக்கிறது. தொடக்க நாட்களில் ஆண்கள் வரவே கூச்சப்பட்டனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர். ஆனாலும் நான் மனம் தளரவில்லை. சீரான முடிவெட்டை பார்த்து, நாளாக நாளாகத்தான் வரத்துவங்கினர் என்றார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :