ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த படம் துப்பாக்கி. இந்த படத்தில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக காட்சிப்படுத்தியிருந்ததால் அந்த சமயத்தில் சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன.
அதையடுத்து சில காட்சிகளை கத்தரித்து படம் வெளியானது. மேலும் என் மகன் ஒரு படத்தில் முஸ்லிம் வேடத்தில் நடிப்பார் என்று விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் அப்போது கூறியிருந்தார்.
அதை நிறைவேற்றும் வகையில் இப்போது ஜில்லா படத்தில் முஸ்லிம் இளைஞராக நடிக்கிறாராம் விஜய். அதனால் இப்போது மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், முஸ்லிம்கள் அணிவது போன்ற காஸ்டியூம் மற்றும் தாடி வைத்துக்கொண்டு ஸ்பாட்டில் காட்சி தருகிறாராம் விஜய்.
ஆனால், படம் முழுக்க இந்த மாதிரி கெட்டப்பில் வருகிறாரா? இல்லையா? என்பது பற்றிய விவரங்கள் தெரியவில்லை.

0 comments :
Post a Comment