அரச ஊழியர்கள் இன்று உரிய நேரத்திற்கு முன் வீடு செல்லலாம்-அபயகோன்

ரச ஊழியர்கள் தமது வேலைதளங்களிலிருந்து உரிய நேரத்திற்கு முன்னதாக இன்று (08) வீடு திரும்ப முடியும் என பொதுநிர்வாக அமைச்சின் செயலாளர் பீ.பி. அபயகோன் தெரிவித்துள்ளார். 

ரயில் தொழிற்சங்க ஒன்றியம் ஆரம்பித்துள்ள பணி பகிஸ்கரிப்பு காரணமாக பயணிகள் பலரும் பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

இந்நிலையில் அரச ஊழியர்கள் போக்குவரத்து சௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதனை தவிர்த்துக் கொள்ளும் நோக்கில் இவ் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் தமது திணைக்களம், நிறுவன முகாமையாளர்களிடம் அனுமதி பெற்று வேலை நிறைவு நேரத்திற்கு முன்னதாக வீடு செல்ல முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :