தமிழ் சினிமாவில் வரிசை கட்டும் பார் பாடல்கள்.

மிழ் சினிமாவில் டாஸ்மாக் பாடல்களோடு சமீபத்தில் அதிக படங்கள் வெளியாகி வருகிறது. சினிமா பாடல்களில், காதல் சோகத்தை வெளிகாட்ட, மது குடித்து ஹீரோக்கள் பாடுவது போல காட்சிகள் வருவது வழக்கம். இது காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் விஷயம்.

ஆனால் இப்போது இது டிரெண்டாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான பெரும்பாலான படங்களில் மதுக்கடை காட்சிகளும் பாடல்களும் இடம்பெறுவது தவிர்க்க முடியாததாக உள்ளது. டாஸ்மாக் கடை பாடல் இடம்பெற்றால் படம் ஹிட்டாகும் என்று கூறப்படுவதால் இப்படியான பாடல்கள் அதிகரித்து வருவதாக கோடம்பாக்கத்தில் கூறுகின்றனர்.

‘சிவா மனசுல சக்தி’ படத்தில் இடம்பெற்ற ‘எம்ஜிஆரு இல்லீங்க, நம்பியாரு இல்லீங்க’பாடல் டாஸ்மாக் கடையில் பாடுவது போல படமாக்கப்பட்டது. ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’படத்தில் இடம்பெற்ற ‘வேணாம் மச்சான் வேணாம்’ பாடல் ஹிட்டானது. ‘முகமூடி’படத்தில், ஒரு படி மேலே போய் டாஸ்மாக் ஆன்தம் என்ற பெயரில் ஒரு பாடலை வைத்தார் இயக்குனர் மிஷ்கின். ‘நாட்டுல, நம்ம வீட்டுல நாம பாட்டிலுக்குள் மாட்டிக்கிட்டோம் மாப்ளே’ என்ற பாடல் ரசிக்கப்பட்டது.

அடுத்து ‘மதுபானக்கடை’ என்ற பெயரிலே ஒரு படம் வந்து அதுபற்றி பாடிப்போனது.‘சகுனி’ படத்தில், ‘போட்டது பத்தல’ என்ற டாஸ்மாக் பார் பாடல் ஹிட்டானது. ‘3’ படத்தில், ‘கொலவெறி’, ‘கலகலப்பு’ படத்தில் இடம்பெற்ற ‘இவளுக இம்சை தாங்க முடியல’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ படத்தில்‘ஒரு பொறம்போக்கு முதன்முதலா சரக்கடிக்க கத்து தந்தான்’, ‘நான்’ படத்தில் ‘மாக்காயேலா மாக்காயேலா’, ‘ஒஸ்தி’ படத்தில் ‘கலாசலா கலாசலா கலாசலா கலாசலா’, ‘உதயம் என்.எச்.4’ படத்தில், ‘ஓரக்கண்ணாலே என்னை ஓரங்கட்டுறா’, ‘எதிர்நீச்சல்‘ படத்தில், ‘சத்தியமா நீ எனக்கு தேவையே இல்லை’,

‘துப்பாக்கி’ படத்தில், ‘கூகுள் கூகுள் பண்ணிப்பார்த்தேன்’ என்பது உட்பட பார் பாடல்களின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துள்ளன. விரைவில் ரிலீஸ் ஆக இருக்கும் பல படங்களில் பார் பாடல்கள் தங்கள் இடங்களை கெட்டியாகப் பிடித்துள்ளன.

‘டிஸ்கோ பாடல்கள், கானா பாடல்கள் ஒரு காலத்தில் அதிகம் வந்தது போல இதுவும் ஒரு டிரெண்ட். குத்துப்பாடல்கள்தான் இப்போது பார் பாடல்களாக மாறியிருக்கின்றன. அடுத்த டிரெண்ட் வரும் வரை இது மாதிரியான பாடல் காட்சிகளைத் தவிர்க்க முடியாதுதான்’ என்றார் முன்னணி இயக்குனர் ஒருவர்.

யுகபாரதி: பார் காட்சிகள் இல்லாமல் சில படங்கள் இல்லை. குடித்தால் ஒழுக்கக் கேடு என்ற நிலை மாறி, தினமும் நடக்கிற விஷயங்களில் இதுவும் ஒன்றாகி விட்டது. பார் காட்சிகளும் குடியும் தவிர்க்க முடியாத அங்கம் மாதிரி உருவாக்குகிறார்கள். இதற்கு காரணம் தெருவுக்கு நான்கைந்து பார்கள் இருப்பதுதான். இது தவிர்க்கப்பட வேண்டும்.

விவேகா: ‘பார் பாடல்கள், கொண்டாட்டங்களின் வெளிப்பாடுதான். இந்த மாதிரியான பாடல்களில்தான், தத்துவங்களை சொல்லலாம். விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளை சொல்லலாம். அதனால் அது நல்ல விஷயம்தான். பல பார் பாடல்கள் சிறப்பானதாக இருக்கிறது. எல்லாவிதமான பாடல்களையும் எழுதுகிறவன்தான் பாடலாசிரியன். அதை நானும் செய்கிறேன். இன்னும் பத்து படங்களுக்கு இதே போன்ற பாடல்கள் எழுதி வருகிறேன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :