இதயம் இல்லாமல் 2 ஆண்டுகள் உயிர் வாழ்ந்த வாலிபர்

ங்கிலாந்தில் உள்ள பாப்வொர்த்தை சேர்ந்தவர் மாத்யூகிரீன் (42). கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் இவரது இதயம் முற்றிலும் பழுதடைந்து செயல் இழந்தது.

அதைத்தொடர்ந்து பாப்வெர்த்தில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதற்கு உடனடியாக இதயம் கிடைக்கவில்லை.

இந்த நிலையில் பழுதடைந்த அவரது இதயம் ஆபரேசன் மூலம் அகற்றப்பட்டது. அதற்கு மாற்றாக வெளியில் இருந்தபடியே ரத்தத்தை உடலுக்குள் பாய்ச்சும் வசதி செய்யப்பட்டது.

அதன் மூலம் இதயம் இல்லாமல் சுமார் 2 ஆண்டுகள் மாத்யூகிரீன் உயிர் வாழ்ந்தார். இந்த நிலையில் சமீபத்தில்தான் அவருக்கு மாற்று இதய ஆபரேசன் நடத்தப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த கிரீன் ´´நான் மிக அதிர்ஷ்டசாலி என்பதை என்னால் நம்பமுடியவில்லை. ஏனெனில் இருதய மாற்று ஆபரேசன் மூலம் நான் 3–வது தடவையாக உயிர் பிழைத்து இருக்கிறேன்´´ என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :