உலகிலேயே அதிகமாக 21 மணிநேரம் நோன்பு நோற்கும் டென்மார்க் முஸ்லிம்கள்

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இவ்வாண்டு 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். உலகிலேயே அதிக மணிநேரம் நோன்பை கடைப்பிடிப்பவர்கள் இந்நாட்டு முஸ்லிம்கள் ஆவர்.

அதேவேளையில் அர்ஜெண்டினாவில் வாழும் முஸ்லிம்கள் 9மணிநேரமே நோன்பை நோற்கின்றார்கள். லத்தீன் அமெரிக்காவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நாடு என்பதால் இவர்களுக்கு உலகிலேயே குறைந்த அளவே நோன்பு நோற்றால் போதும். ஏனெனில் இங்கு பகல் குறைந்த நேரம் ஆகும்.


அதேவேளையில் ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் சூழல் ஆச்சரியமானது. அங்கு 24 மணிநேரம் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயே நடக்கிறது. சில காலங்களில் இரவு அதிகமாக வரும். அக்காலங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அம்மக்கள் கூறுகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :