ரணில் விக்ரமசிங்க மற்றும் MP விஜேதாஸ உள்ளிட்ட குழுவினர் மீது கொலை வெறித்தாக்குதல்


திர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் மீது கொலைவெறித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பலபிட்டிய - மீகெட்டுவத்த பிரதேசத்தில் இன்று (11) மாலை 4.30 அளவில் இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்தார்.

மீன்பிடி தொழிலுக்குச் சென்று கடும் காற்று காரணமாக அனர்த்தத்திற்கு உள்ளாகி உயிரிழந்த சிலரது மரண வீடுகளுக்கு எதிர்கட்சித் தலைவர் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர்.

அதன்போது நூற்றுக்கும் அதிகமான நபர்கள் தங்களை நோக்கி கல்வீச்சுத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதில் எதிர்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டதாகவும் விஜேதாஸ ராஜபக்ஷ குறிப்பிட்டார்.ad
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :