அரச அங்கீகாரம்பெற்ற மொழிபெயர்ப்பாளராக எ.பி.எம்.றிஜான் நியமனம்

(முசலியூர்.கே.சி.எம்.அஸ்ஹர்)
னசமுக வீதி சாய்ந்தமருது-15 ம் பிரிவைச்சேர்ந்த அகமது பாச்சா முகம்மது றிஜான்என்பவர் அண்மையில் நீதி அமைச்சினால் நடாத்தப்பட்ட(தமிழ்/ஆங்கிலம்) ஆகிய மொழிகளுக்கான மொழிபெயர்ப்பாளர் பரீட்சையில் சித்தியடைந்துஇஅரச அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராகநீதியமைச்சினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 29-01-2013 ஆந்திகதியன்று கல்முனை மாவட்ட நீதிவான் ஆ. முகைதீன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

அட்டாளைச்சேனைதேசிய கல்வியியற்கல்லூரியில் கற்பித்தலில் தேசிய டிப்ளோமாவை பூர்த்திசெய்தபின் அக்ஃ பொத்துவில் மத்திய கல்லூரியில் கணித பாட ஆசிரியராக முதல் நியமனம் பெற்று சேவையாற்றியபின் தற்போது அக்/அல்-முனீரா பெண்கள் உயர் பாடசாலையில் பட்டதாரி ஆசிரியராக கடமையாற்றுகிறார்;

. பல்வேறு சமுகசேவைகளில் ஈடுபாடு கொண்டஇவர் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவவியல் பீடத்தின் வணிக நிர்வாக முதுமாணி பட்டப்பின்படிப்புக் கற்கைநெறியின் மாணவராகும்என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் ஆர்.அகமது பாச்சா மற்றும் எம்.ஏ.நூறுல்லத்தீபா  தம்பதியினரின் மூத்த புதல்வராவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :