செம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட்டில் கார்டிப்பில் நேற்று நடைபெற்ற ‘பி’ பிரிவு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க மற்றும் மேற்கிந்திய தீவு அணிகள் மோதின.
நீண்ட நேரம் மழை பெய்ததால், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது. நாணய சுழற்சியை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி தலைவர் பிராவோ முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
தென் ஆப்பிரிக்காவில் காலின் இங்ராமும், அம்லாவும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார்கள். மோசமான வானிலையிலும் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி 80 ஓட்டங்கள் (12.1 ஓவர்) எடுத்தது. அம்லா 23 ஓட்டங்களிலும், இங்ராம் 73 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.
இது குறைந்த ஓவர் கொண்ட போட்டி என்பதால், களம் இறங்கிய ஒவ்வொரு துடுப்பாட்ட வீரர்களும் வேகமாக ஓட்டங்களை குவிப்பதில் கவனம் செலுத்தினர். டுமினி 2 ஓட்டங்களிலும், தலைவர் டிவில்லியர்ஸ் 37 ஓட்டங்களிலும் வெளியேறினர். இறுதி கட்டத்தில் டு பிளிஸ்சிசும் (35 ஓட்டங்கள்), டேவிட் மில்லரும் (38 ஓட்டங்கள்) அணி 200 ஓட்டங்களை கடக்க உதவி புரிந்தனர்.
நிர்ணயிக்கப்பட்ட 31 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் குவித்தது.
231 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்திய தீவு அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. சார்லஸ் 16 ஓட்டங்களிலும், கிறிஸ் கெய்ல் 36 ஓட்டங்களிலும், டேவோன் சுமித் 30 ஓட்டங்களிலும், டேரன் பிராவோ 12 ஓட்டங்களிலும், சாமுவேல்ஸ் 48 ஓட்டங்களிலும் ஆட்டம் இழந்தனர்.
யாருக்கு வெற்றி என்பதை கணிக்க முடியாத சூழலில், மழை அவ்வப்போது கண்ணாமூச்சி காட்டிக் கொண்டிருந்தது. கடைசியாக மெக்லாரன் வீசிய பந்தில் பொல்லார்ட் (28 ஓட்டங்கள்) 6-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தபோது, மழை அதிகமாக கொட்டியதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
அப்போது மேற்கிந்திய தீவுகள் அணி 26.1 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 190 ஓட்டங்கள் சேர்த்திருந்தது. தொடர்ந்து மழை பெய்ததால், ஆட்டத்தின் முடிவை அறிய டக் வர்த் லுவிஸ் விதிமுறை கடைபிடிக்கப்பட்டது. வெற்றிக்கு மேற்கிந்திய தீவுகள் அணி 26.1 ஓவர்களில் 191 ஓட்டங்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் 190 ஓட்டங்களே எடுத்திருந்ததால் ஆட்டம் சமனில் முடிந்து, இரு அணிக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் மூலம் ரன்-ரேட்டில் மேற்கிந்திய தீவுகள் (ரன்ரேட் -0.422) விட தென் ஆப்பிரிக்கா (ரன்ரேட் +0.642) முன்னிலை வகிப்பதால் அந்த அணி அரை இறுதிக்கு முன்னேறியது. மேற்கிந்திய தீவுகள் பரிதாபமாக வெளியேறியது.

0 comments :
Post a Comment