(எம்.பைஷல் இஸ்மாயில்)
அம்பாறை மாவட்டத்திலுள்ள பிரதான போக்குவரத்துப் பாதைகளிலும் சந்தைப் பிரதேசங்களிலும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் வீதி விபத்துக்கள் மற்றம் வாகன போக்குவரத்து நெரிசல்களும் அதிகரித்துள்ளன என பொதுக்களும், வாகன சாரதிகளும், வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
இம்மாவட்டத்தின் அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை, நிந்தவூர், சம்மாந்துறை மற்றும் காரைதீவு ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பொலிஸ் நிலைய பிரதான வரத்துப் பாதைகளில் இக்கட்டாக்காலி மாடுகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுவதுடன் வாகன போக்கு வரத்திற்கும் இதுவொரு பெரும் தடையை எற்படுத்துவதாகவும் சாரதிகள் விசனம் தெரிவிப்பதோடு மேற்படி பிரதேசங்களிலுள்ள சந்தைப் பிரதேசங்களை அசுத்தமாக்குவதுடன் விற்பனைக்காக வைக்கப்படும் காய்கறி வகைகளையும் விட்டு வைப்பதில்லை எனவும் சந்தை வியாபாரிகளும் கவலை தெரிவிக்கின்றனர்.
இது மாத்திரமல்லாமல் இக்கட்டாக்காலி மாடுகள் இரவு நேரங்களில் பிரதான வீதியோரங்களிலுள்ள பஸ் தரிப்பு நிலையம், வியாபார நிலையம் போன்றவற்றை அசுத்தமாக்கி பிரதான பாதைகளில் இருள் சூழ்ந்த இடங்களில் படுக்கையை அமைத்துக் கொள்வதனால் இரவு வேளைகளில் மிக வேகமாக வாகனங்களை செலுத்தி வருகின்ற சாரதிகள் இக்கட்டாக்காலிகள் மீது மோதுண்டு பாரிய விபத்துக்களையும் சந்தித்து வருகின்றனர். இதனால் பாரிய உயிர் மற்றும் பொருள் தேசங்கள் ஏற்பட்டு வருகின்றன.
இதேவேளை அட்டாளைச்சேனை பிரதான வீதியின் அருகாமையிலுள்ள சஷா மல்டிகொம் அருகாமையில் இன்று 2013.06.12 இடம்பெற்ற வாகன விபத்தில் அக்கரைப்பற்று நோக்கி வந்த கென்டர் ரக வாகனம் வரும்போது வீதியோரம் நின்று கொண்டிருந்த கட்டாக்காலி மாடானது திடீரென பாய்ந்ததினால் கென்டர் வாகன சாரதி தனது வாகனத்தை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர முடியாமல் போனதால் இக்கட்டாக்காலி மாடு மீது மோதுண்டதால் வானம் சேதமாக்கப்பட்டதுடன் மாடும் ஸ்தலத்தில் மரணத்தை தழுவிக்கொண்டது.
இதேநேரம் கட்டாக்காலி மாட்டின் உரிமையாளர் சம்பம் நடந்த இடத்துக்கு வந்திருந்தும் கூட அந்த மாட்டின் உரிமைப் பொறுப்பை ஏற்க மருத்துவிட்டார்.
கடந்த காலங்களில் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் இவ்வாறு பகல், இரவு வேளைகளில் கட்டாக்காலிகளின் தொல்லை அதிகரித்து காணப்பட்டதைத் தொடர்ந்து அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சின் அதி உயர்பீட உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் இது தொடர்பில் கட்டாக்காலி உரிமையாளர்களுக்கு பல தடவைகள் அறிவித்தல் விடுத்திருந்தபோதும் கட்டாக்காலிகளின் தொல்லை மேலும் அதிகரித்து காணப்பட்டன.
இதனை கட்டுப்படுத்துவதற்காக ஒரு இரவுப் பொழுது நேரம் வரை நின்று கொண்டு வீதியோரங்களில் நின்ற அனைத்து கட்டாக்காலிகளையும் பிடித்து அடைக்கப்பட்டு மறுநாள் உரிமையாளர்களிடம் ஒப்டைக்கும்போது தவிசாளர் அன்ஸில் எச்சரிக்கை வித்து தண்டப்பணமும் அறவீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த கட்டாக்காலிகளின் தொல்லை பல மாதங்களாக குறைந்து காணப்பட்டன.
இந்நிலைமை மீண்டும் ஆரம்பித்து காணப்படுவதால் இதுதொடர்பில் பொதுமக்கள், வியாபாரிகள் மற்றும் சாரதிகள் ஆகியோர் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளருக்கு முறைப்பாடுகளை தெரிவித்துள்ளர். அதனால் கட்டாக்காலி உரிமையாளர்கள் தங்களின் கட்டாக்காலி மாடுகளை ஒரு ஒதுக்கு புறமான பகுதியில் வைத்துக்கொள்ளுமாறும், தவறும் பட்சத்தில் அனைத்து கட்டாக்காலிகளையும் பிடித்து அக்கரைப்பற்று பொலிஸ் ஊடாக நீதி மன்றத்தில் ஒப்படைக்கப்படும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே தவிசாளர் விடுத்துள்ள கோரிக்கைக்கு கட்டாக்காலி உரிமையாளர்கள் செவி சாய்த்து செயற்பட்டவர்களாகவும் எதிர்வரும் காலங்களில் இவ்வாறான தவறுகள் இடம்பெறாமலும், அதன் மூலம் எதிர்நோக்கவுள்ள பல சிறமங்களில் இருந்தும் தப்பித்துக்கொள்ள முயற்சி செய்வதன் மூலம் எமது பிரதேசத்தில் ஏற்படுகின்ற உயிர் மற்றும் பொருள் சேதங்களில் இருந்தும் எம்மை பாதுகாத்துக்கொள்ளலாம். என்பது உறுதியாகும்.
0 comments :
Post a Comment