கோடீஸ்வரியாக நடித்து பத்து ஆண்களை திருமணம் செய்த களுத்துறை கேடியான பெண்.

கோடீஸ்வரப் பெண்ணாக நடித்து பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களை பிரசுரித்து மேலிடத்து நபர்களை சட்டபூர்வமாக திருமணம் செய்து கோடிக்கணக்கான பணத்தையும் சொத்துக்களையும் மோசடி செய்ததாகக்கூறப்படும் பெண்ணொருவரை களுத்துறை வடக்கில் பாணந்துறை குற்றப்புலனாய்வுத்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

37 வயதான இப்பெண் பத்துப் பேரை இவ்வாறு மோசடி செய்து திருமணம் செய்துள்ளதாகவும் பத்துப்பேரில் வர்த்தகர்களும் இராணுவ மேஜர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் பத்திரிகைகளில் திருமண விளம்பரங்களைப் பிரசுரித்து திருமணமாகாத வர்த்தகர்களை வீட்டுக்கு வரச் செய்து அவர்களை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்து உடனடியாக பதிவுத் திருமணம் செய்து பின்னர் பல்வேறு காரணங்களைக் கூறி அவர்களிடம் லட்சக்கணக்கில் பணத்தை பெற்றுள்ளதாகவும் விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

பணம் பெற்ற பின்னர் பல்வேறு வகையில் பொருத்தமில்லை எனத் தெரிவித்து அந்நபர்களைத் தவிர்த்து விட்டு விவாகரத்து பெற முயற்சிப்பதாகவும் கூறப்படுகிறது.

சந்தேகநபரின் மோசடியில் சிக்கிய இருவர் பாணந்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு செய்து கொண்ட முறைப்பாட்டை அடுத்து இப்பெண்ணை கைது செய்யப்பட்டுள்ளார்.

களுத்துறை வடக்கில் ஆடம்பர வீடொன்றில் தமது தாயுடன் வசிக்கும் பெண்ணின் மோசடிக்கு தாயும் உடந்தையாக இருந்துள்ளார்.

பாணந்துறை பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :