வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி பயனித்த இலங்கை போக்குவரத்துச் சாலையின் ஏறாவூர் சாலை சாரதி மீது இன்று (15.06.2013) பிற்பகல் 05.30 மணியளவில் நடாத்திய தாக்குதலில் காயம் அடைந்த சாரதியான எம்.ஐ.எம்.லாபீர் (வயது – 45) வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சாரதியை இலக்கு வைத்து சோடா போத்தலினால் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் இரண்டு பயணிகள் சிறு காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது.
சாரதியை இலக்கு வைத்து சோடா போத்தலினால் தாக்கப்பட்ட சம்பவத்தில் மேலும் இரண்டு பயணிகள் சிறு காயமடைந்ததாகவும் அறிய முடிகின்றது.
வாழைச்சேனையில் இருந்து ஏறாவூர் நோக்கி செல்லும் வேளையில் வாழைச்சேனை – மட்டக்களப்பு பிரதான வீதியில் கிண்ணயடிச் சந்தியில் வைத்து இத் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. தணியார் பஸ் ஊழியர்களாலயே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என ஆரம்பக் கட்ட விசாரனைகள் மூலம் தெரிய வந்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
தணியார் பஸ் ஊழியர்களுக்கும் இலங்கை போக்குவரத்துச் சாலை ஊழியர்களுக்கும் இடையில் உள்ள போட்டி நிலமை காரணமாகவே இத் தாக்குதல் நடாத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரனைகளைமேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment