செக்ஸ் தொழிலாளியின் மகளுக்கு அமெரிக்காவில் கிடைத்த அதிர்ஷ்டம்!


மும்பையை சேர்ந்த செக்ஸ் தொழிலாளியின் மகள் அமெரிக்காவில் உயர் கல்விக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியான காமாட்டிபுராவைச் சேர்ந்தவர் ஸ்வேதா(வயது 18).

இவரின் தாத்தா பெண்களை வைத்து செக்ஸ் தொழில் நடத்தி வந்தார்.

இதில் விரும்பமின்றி ஸ்வேதாவின் தாய் அங்கிருந்து தப்பித்து சென்று, தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

எனினும் சூழ்நிலையின் காரணமாக அவரும் பாலியல் தொழிலுக்கு தள்ளப்பட்டார்.

இந்நிலையில் குழந்தையை பெற்றெடுத்து நல்ல முறையில் வளர்த்து வந்தார். அதன் பின் பாலியல் தொழிலையும் கைவிட்டார்.

இருப்பினும் பாலியல் தொழிலாளர்கள் வசிக்கும் காமாட்டிபுராவிலேயே வசித்ததால், விவரம் தெரியாத வயதில் ஸ்வேதாவும் பல ஆண்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இதனிடையே அப்பகுதி அரசுப் பள்ளியில் படித்த ஸ்வேதா, கடந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று ஓராண்டு காலம் படிப்பை தொடராமல், ஜார்கண்ட், சத்தீஸ்கர் உள்ளிட்ட பழங்குடியினர் வசிக்கும் பகுதிக்கும், நேபாள நாட்டின் மலை வாழ் மக்களிடமும் சென்று அங்குள்ள சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தல் குறித்த, விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டார்.

இவரது சிறந்த பணிகளை பாராட்டி அமெரிக்காவில் உள்ள போர்டு கல்லூரி கல்வி உதவித் தொகையுடன், இலவசமாக மேற்படிப்பை தொடரவும் ஸ்வேதாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதன் படி ஆண்டுக்கு 28 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை கிடைப்பதுடன், 10 லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீட்டையும் இலவசமாக வழங்கியுள்ளது.TCNN
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :