விண்வெளி ஆராய்ச்சிக்காக சீனா 2-வது பெண்ணை நாளை அனுப்ப உள்ளது.


விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்கா, ரஷ்யா ஆகிய நாடுகள் விண்ணில் நிரந்தர ஆய்வு மையங்களை அமைத்துள்ளன. இதேபோல் சீனாவும் தனியாக ஒரு ஆய்வு மையத்தை அமைத்து வருகிறது. இதற்காக பயிற்சி பெற்ற வீரர்களை அனுப்பி பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

கடந்த ஆண்டு ஒரு பெண் மற்றும் 2 ஆண்கள் விண்வெளிக்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர். தற்போது 2-வது பெண்ணை நாளை அனுப்ப உள்ளது. உள்ளூர் நேரப்படி நாளை பிற்பகல் 5.38 மணிக்கு லாங் மார்ச் என்ற ராக்கெட் மூலம் ஷென்சூ-10 விண்கலம் விண்வெளிக்கு புறப்படுகிறது. 

இந்த விண்கலத்தில் வாங் யாபிங் (வயது 35) என்ற விண்வெளி வீராங்கனையுடன், நீ ஹைஷெங், ஜாங் ஜியாகாங் ஆகிய வீரர்களும் விண்வெளிக்கு செல்கின்றனர். விவசாயக் குடும்பத்தில் பிறந்த வாங் யாப்பிங் கடந்த ஆண்டு வாய்ப்பை இழந்தார்.

விமானப்படையில் விமானியாக பணியாற்றி வரும் யாப்பிங், விண்வெளிக்கு செல்லும் முதல் பெண் என்ற பெருமையை பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், கடந்த ஜூன் மாதம் சென்ற விண்கலத்தில், சக விமானியாக பணியாற்றிய லியூ யாங் விண்வெளிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது. நாளை புறப்படும் ஷென்சூ-10 விண்கலம் 15 நாட்கள் பயணம் மேற்கொண்டு விண்வெளியில் சோதனைகளை மேற்கொள்ளும். சினாவின் விண்வெளி ஆய்வு மையம் அமைக்கும் பணிகள் 2020-ம் ஆண்டுக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :