கல்முனை ஆசிரியர் இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்.



(பஹ்மியூஸூப்)

ல்முனை கல்வி வலயத்தின் வலயங்களுக்கான ஆசிரியர் சமப்படுத்தல் இடமாற்றத்தில் மாற்றம் செய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 205 ஆசிரியர்கள் தமது செல்வாக்கினை பயன்படுத்தி சொந்த இடங்களிலே நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர். 

2011 இடமாற்றம் செய்யப்பட்ட போது கிண்ணியா, மூதூர், கல்குடா மற்றும் மட்டக்களப்பு போன்ற வெளி இடங்களில் பணியாற்றி நிறைவு செய்து விட்டு வந்தவர்களில் 45 பேர் தமது சொந்த இடத்திற்கு நிரந்தர நியமனம் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 

இந்நிலையை கண்டித்து திருகோணமலை மாகாண கல்விப் பணிமனைக்கு முன்னால் இன்று புதன்கிழமை 12.06.2013 காலை 11.00மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்றினை நடாத்தினர். தமக்கான நீதி கோரி 45 ஆசிரியர்களின் கையொப்பம் அடங்கிய மனு ஒன்றையும் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :