புத்தர் சிலை நிறுவும் விவகாரம் பௌத்த தேரர் மனித உரிமை ஆணைக்குழுவிடம் புகார்



ட்டக்களப்பு பிள்ளையாரடி வளைவில் புத்தர் சிலை நிறுவும் விவகாரத்தை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன தேரர் மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

இதுவிடயமாக நேற்று மாலை 11.06.2013 எழுத்து மூலமான முறைப்பாடொன்றை மட்டக்களப்பு மங்களராமய விஹாரையின் விஹாராதிபதி அம்பிட்டியே சுமணரத்ன அவர்கள் தங்களிடம் கையளித்துள்ளதாக மட்டக்களப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் இ. மனோகரன் தெரிவித்தார்.

இதனிடையே இந்த விவகாரம் ஏற்கெனவே மட்டக்களப்பு நீதிமன்றத்தின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டு வரப்பட்டு குறித்த இடத்தில் புத்தர் சிலை நிறுவுவது பொதுத் தொல்லையையும் சமூக அமைதிக்குப் பங்கத்தையும் ஏற்படுத்தும் என பொலிஸார் தமது அறிக்கையில் குறிப்பிடப்பட்டிந்ததன் பேரில் குறித்த இடத்தில் புத்தர் சிலை வைப்பதற்கு தடை விதித்து அது தொடர்பான வேலைகளை நிறுத்துமாறு நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :