கல்முனை கல்வி வலயத்தின் வலயங்களுக்கான ஆசிரியர் சமப்படுத்தல் இடமாற்றத்தில் மாற்றம் செய்யப்பட்ட 250 ஆசிரியர்களில் 205 ஆசிரியர்கள் தமது செல்வாக்கினை பயன்படுத்தி சொந்த இடங்களிலே நிரந்தர நியமனம் பெற்றுள்ளனர்.
2011 இடமாற்றம் செய்யப்பட்ட போது கிண்ணியா, மூதூர், கல்குடா மற்றும் மட்டக்களப்பு போன்ற வெளி இடங்களில் பணியாற்றி நிறைவு செய்து விட்டு வந்தவர்களில் 45 பேர் தமது சொந்த இடத்திற்கு நிரந்தர நியமனம் இன்றி புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையை கண்டித்து திருகோணமலை மாகாண கல்விப் பணிமனைக்கு முன்னால் இன்று புதன்கிழமை 12.06.2013 காலை 11.00மணியளவில் கவனயீர்ப்பு போராட்டம் ஓன்றினை நடாத்தினர். தமக்கான நீதி கோரி 45 ஆசிரியர்களின் கையொப்பம் அடங்கிய மனு ஒன்றையும் மாகாண கல்விப் பணிப்பாளரிடம் வழங்கியுள்ளனர்.
0 comments :
Post a Comment