அடகு வைக்கும் நகைகளை மீளப் பெற பகுதி பகுதியாக பணம் செலுத்த முடியும்.


பொது மக்களின் நன்மை கருதி மக்கள் வங்கியில் அடகு வைக்கும் நகைகளை மீளப் பெறும் வகையில் பகுதி பகுதியாக பணம் செலுத்தும் தவணையை மக்கள் வங்கி மேலும் அதிகாரித்துள்ளது.

மக்கள் வங்கியில் அடகு வைக்கும் நகைகளை மீளப் பெறுவதற்கு இது வரை காலமும் வட்டியையும் முதலையும் நான்கு தடவைகள் வங்கியில் செலுத்தி குறிப்பிட்ட அடகு நகையை மீட்கக் கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தன.

தற்போது மக்கள் வங்கியில் ஐயாயிரம் ரூபாவுக்க மேற்பட்ட தொகைக்கு அடகு வைக்கப்பட்ட நகைகளை பன்னிரெண்டு தடவைகள் பகுதி பகுதியாக வட்டியையும் முதலையும் செலுத்தி உரிய அடகு பொருட்களை மீட்டுக் கொள்ள முடியும் என சுன்னாகம் மக்கள் வங்கியின் முகாமையாளர் ப.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

மக்கள் வங்கியில் அடகு வைக்கப்படும் நகைகள் இத்தகைய வசதிகள் கொண்டு தாம் அடகு வைத்த நகைகளை மீள எடுப்பதில் ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்தார்.உதயன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :