
ராஜித சேனாரத்ன, வாசுதேவ நாணயக்கார, டியூ குணசேகர, திஸ்ஸ விதாரண ஆகியோருக்கு தேவையான வகையில் 13ஆவது அரசியல் அமைப்புத் திருத்தச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்ல இடமளிக்க போவதில்லை எனவும் அவர்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பதுளையில் நடைபெற்ற அந்த அமைப்பின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேற்படி அமைச்சர்களின் அரசியல் வாழ்க்கையை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அத்துடன் வாசு, திஸ்ஸ விதாரண போன்றவர்கள் நாட்டு மக்களின் உரிமைகளை கொள்ளையிட இடமளிக்கக் கூடாது.
பிரிவினைவாத இடதுசாரி அணியில் இருக்கும் சிலர், 13ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தில் உள்ள அதிகாரங்களில் மாற்றங்களை செய்ய இடமளிக்க போவதில்லை எனக் கூறுகின்றனர். அதிகாரங்களை வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்குமாறு கூறுகின்றனர்.
அதற்காக அவர்கள் குரல் கொடுப்பார்களாம். முடிந்தால் செய்து காட்டுங்கள் என்று நாங்கள் சவால் விடுக்கின்றோம். மக்களின் வாக்குரிமைகளை கொள்ளையிட்டு நாடாளுமன்றத்திற்கு சென்றவர்கள் இவர்கள், மக்களின் உரிமைகளை கொள்ளையிட இடமளிக்க போவதில்லை.
ஒரு நாட்டின் கலை, கலாசாரங்களை உருவாக்கியவர்களே அந்த நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க இனம் என்பது உலகில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. இலங்கையின் வரலாற்று உரிமை, கலை, கலாசார உரிமை போன்றவற்றின் உண்மையான உரிமையாளர்கள் வேறு யாருமல்ல சிங்களவர்களே. சிங்களவர்களிடம் இருக்கும் இந்த உரிமையை கொள்ளையிட, அன்று இந்த நாட்டில் குடியேறியவர்கள் தயாராகி வருகின்றனர். இந்த குடியேறிகள் யார் என்பதை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிந்து கொள்ள வேண்டும் எனவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.vk
0 comments :
Post a Comment