பல்கலைக்கழக மாணவி அவரின் கார் சாரதி மற்றும் நண்பனுடன் இணைந்து கற்பளிப்பு.

ங்குள்ள ராஜேந்திரா நகரில் வசித்து வரும் அக்காவின் வீட்டில் தங்கியபடி இளம்பெண் ஒருவர் டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார்.

இவரது அக்கா சமீபத்தில் பழைய கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த காரின் பதிவுச் சான்றிதழை பழைய உரிமையாளரிடம் இருந்து வாங்கி வருவதற்காக காரின் டிரைவர் யோகேஷ் என்பவனுடன் நேற்றிரவு அந்த மாணவி சென்றுள்ளார்.

இரவு 8.30 மணியளவில் ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்குள் காரை ஓட்டிய யோகேஷ், போகும் வழியில் அவனது நண்பனையும் காரில் ஏற்றிக் கொண்டான்.

பாழடைந்த ஒரு தொழிற்சாலை கட்டிடத்திற்குள் காரை நிறுத்தி அந்த இளம்பெண்ணை காரினுள் வைத்தே இருவரும் கதறக் கதற கற்பழித்துள்ளனர்.

அவர்களிடமிருந்து தப்பியோடி வந்த மாணவி நள்ளிரவு 12.30 மணிக்கு செல்போன் மூலம் நடந்த சம்பவத்தை அக்காவிடம் கூறி அழுதாள்.

சம்பவ இடத்திற்கு கணவருடன் விரைந்து வந்த அவர், மாணவியை அழைத்துச் சென்று போலீசில் புகார் அளித்தார்.

மருத்துவ பரிசோதனைக்காக மாணவியை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்த போலீசார், டிரைவர் யோகேஷை கைது செய்து அவனது நண்பன் ஆசிப் பற்றிய தகவல்களை விசாரித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :