பொது பல சேனா வினர் அடிப்படைவாதிகள் அல்ல-திலகரத்னா

எ.எம்.எம்.முஸம்மில், 
பொது பல சேனா வினர் அடிப்படைவாதிகள் அல்ல. பதுளை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பயமானது , ஒருவன் பாம்பு புற்றை கண்ட பயமே. !
பதுளை ஏ எஸ் பி திரு ஈ பி திலகரத்னா தெரிவிப்பு. !!

2013/06/15ந் திகதி பதுளையில் நடைபெறவுள்ள பொது பல சேனாவின் பொதுக்கூட்டம் சம்பந்தமாக பதுளை முஸ்லிம்களின் நிலைமைகள் குறித்து மேற்கொள்ளப் படவேண்டிய ஒழுங்குகள் சம்பந்தமாக பதுளை ஜும்மா பள்ளி நிர்வாகத்தால் 2013/06/14 ந் திகதி ஜூம்மவிற்கு பின் ஏற்பாடு செய்யப்பட கூட்டத்தில் உரை நிகழ்த்திய பதுளை போலிஸ் நிலைய ஏ எஸ் பி திரு ஈ பி திலகரத்னா, அவர்கள் தொடர்ந்தும் உரை நிகழ்த்துகையில் “பொது பல சேனாவினர் தீவிர வாதிகள் அல்ல.

நான் அவர்களுடனும் இதுபற்றி கதைத்துள்ளேன் . அவர்கள் சமூக ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார்கள் , தீவிரவாத கொள்கையுடையவர்கள் எல்லா சமூகங்களிலும் உள்ளனர், ஆனால் அவர்கள் மிகச்சிலரே. ஆனால் அவர்களுக்கு சமூக ஒற்றுமையை சீர்குலைக்க நாங்கள் விடமாட்டோம். பதுளை முஸ்லிம்களுக்கு இன்று ஏற்பட்டுள்ள பயமானது , ஒருவன் பாம்பு புற்றை கண்ட பயமே.!

 பாம்பு புற்றை கண்டதும் சிலருக்கு பயம் வந்து விடும் , அதில் பாம்பு இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்கள் பயந்து விடுவார்கள் , அதற்கு சிங்களத்தில் சொல்வார்கள், “ ஹும்பஸ் பய ” என்று, நாளைய கூட்டம் அவர்கள் அவர்களின் பாட்டில் செய்வார்கள் , நீங்கள் உங்கள் வேலைகளை செய்துகொண்டு போங்கள், பாதுகாப்பு விடயமாக நாங்கள் கவனித்து கொளவோம் .ஆனால் நான் இவ்விடத்தில் உங்களிடத்தில் ஒரு வேண்டுகோளை விடுக்க விரும்புகின்றேன் , அதாவது நாளை இறைச்சி கடைகளை  மூடிவையுங்கள். 

அது தவிர ஏனைய விடயங்கள் வழமைபோல நடைபெறலாம்”. என்றும் தெரிவித்தார். குழப்ப நிலையை ஏற்படுத்தும் நோக்கில் தூண்டிவிடுபவர்கள் பற்றி இந்த சமூகத்திலிருந்து எவரையாவது நீங்கள் கண்டால் உடனடியாக எங்களுக்கு அறிவித்து விடுங்கள் ,அவர் விடயத்தில் நாங்கள் கவனித்து கொள்வோம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

பிற்குறிப்பு :-
முஸ்லிம்களின் மோசமான எதிரி முஸ்லிம்களே!
Dr. பால் க்ரைக் ராபர்ட்ஸ்
Dr. Paul Craig Roberts
கட்டுரையாளர், டாக்டர் பவுல் கிரேக் ராபட்ஸ் அவர்கள், அமெரிக்க கருவூலத்தின் (Treasury) முன்னாள் பிரதிச் செயலர், ‘வால்ஸ்ட்ரீட்’ பத்திரிகையின் கூட்டு ஆசிரியர், ஹூவர் கலாசாலையிலே ஒரு ஆராய்ச்சியாளர், அரசியற் பொருளாதார விரிவுரையாளர்.

முஸ்லிம்களோ சனத்தொகையில் மிக அதிகம். ஆனால், அவர்களுக் கிடையேயான பிரிவினையோ அதைவிட அதிகம்

“தம்மை அடிமைப்படுத்த முயலும் ஏகாதிபத்தியத்தை வெறுப்பதைவிட , தம்மைத்தாமே வெறுத்துக்கொண்டும் தம்மைக்கண்டு தாமே பயந்துகொண்டும் இருக்கும்வரை முஸ்லிம்கள் தோற்றுக்கொண்டே இருப்பார்கள்!”
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :