சீரற்ற காலநிலை நிலவுவதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

மன்னாரிலிருந்து கொழும்பு, காலி, பொத்துவில் வரையான கடல் மற்றும் கரையோரப் பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவுவதால் மீனவர்கள்

மீன்பிடிக்கச் செல்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலை வரையான கடல் மற்றும் கடற் கரையோரப் பிரதேசங்களிலும் சீரற்ற காலநிலை நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

இப்பிரதேசங்களில் மணித்தியாலயத்திற்கு 70 கிலோமீற்றர் வரையான வேகத்தில் காற்று வீசுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதன் காரணமாக மீனவர்களை அவதானமாக செயற்படுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு, மத்திய, ஊவா, வடமத்திய மாகாணங்களிலில் கூடிய மழை வீழ்ச்சிகளுடன் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இதேவேளை புத்தளம் மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :