அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த சுற்றாடல் விழிப்புணர்வு சூழல் துப்பரவு.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

உலக சுற்றாடல் வாரத்தையொட்டி அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த சுற்றாடல் விழிப்புணர்வு செயலமர்வும், சுற்றுச் சூழல் துப்பரவு செய்தலும், தெரு மின் விளக்கு பொருத்தும் நடவடிக்கையும் இன்று ஞாயிற்றுக்கிழமை (2013.06.09) பின்தங்கிய கிராமமான அட்டாளைச்சேனை சம்புநகர் கிராமத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வு சம்புநகர் சனசமூக நிலையத்தின் தலைவர் ஏ.தஸ்லிம் தலைமையில் வீட்டுத்திட்ட கூட்ட மண்டபத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அதிஉயர்பீட உறுப்பினருமாகிய சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸிலும், கொளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.எம்.உவைஸ், பிரதேச சபை செயலாளர் ஏ.சித்திக் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதில் பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளினால் சமகாலத்தில் சுற்றாடலைப் பேணுவதன் முக்கியத்துவம் பற்றியும் சுற்றாடல் மாசடைவதன் மூலம் ஏற்படுகின்ற பாதிப்புக்கள் தொடர்பாகவும் மக்களுக்கு மிக தெளிவான விளக்கங்களை கொடுத்தனர்.

மேலும் சம்புநகர் மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் வீட்டுத்திட்ட வீதிகளை துப்பரவு செய்யும் நடவடிக்கையினை அதிதிகளினால் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பிரதம அதிதி தவிசாளர் சட்டத்தரணி ஏம்.ஏ.அன்ஸிலினால் வீதிகளில் பொருத்தப்பட்ட தெருவிளக்கை ஆரம்பித்து வைத்தார்.

அதேவேளை வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் மக்களின் குறைபாடுகளை அதிதிகள் நேரில் சென்று கேட்டறிந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :