வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வேட்டைக்குச் சென்ற ஒருவர் மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பன்வில பகுதியில் இடம்பெற்றுள்ளது.

பன்வில கெலேபொக்க பகுதியில் காட்டுப்பன்றி வேட்டைக்குப்போன இருவரில் ஒருவரே மரமொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

காட்டுப்பன்றியை வேட்டையாடுவதற்காக ஆறடி நீளமாக ஈட்டியுடன் இருவர் வேட்டைக்கு சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பன்றியை குத்தியுள்ளார்.

அந்த பன்றியும் அவரை திருப்பி தாக்கியுள்ளது. இதனால் கடும் காயமடைந்து நிலைத்தடுமாறிபோன அவர் தன்னை காப்பாற்றிக்கொள்வதற்காக அருகிலிருந்த மரத்தில் ஏறியுள்ளார்.

உடன்சென்றவரோ தப்பினோம் பிழைத்தோமென ஊருக்கு ஓடி நடந்தவற்றை ஊரில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.

மரத்தில் ஏறியவரை காப்பாற்றுவதற்காக ஊரிலிருந்தவர்கள் சிலர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சென்றுபார்த்தபோது அவர் மரத்திலேயே மரணமடைந்து விட்டதை கண்டுள்ளனர்.

இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதுடன் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :