வியாபாரியை செக்ஸ் ஆசை காட்டி கொலை செய்த கொடூரமான பெண்.

டந்த 30ஆம் தேதி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த முட்டை வியாபாரி காளிமுத்து மிகக்கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உடலை வெட்டி துண்டு துண்டாக ஆங்காங்கே வீசி விட்டுச்சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதில் வேலு என்பவரையும் காளிமுத்துவின் கள்ளக்காதலி சுஜாதா மற்றும் இவரது கணவர் முருகன் என்பவரையும் போலீஸ் தேடி வந்தது. இதில் வேலு முதலில் சிக்கினார்.

இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அருகேயுள்ள ரங்கப்பனூரில் சுஜாதா (30) பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது.

மாமியார் வீட்டில் பதுங்கியிருந்த சுஜாதா இதனையடுத்து சிக்கினார். அவர் விசாரணைக்காக சென்னை தனிப்படை ரெயில்வே போலீசார் சென்னைக்கு அழைத்து வந்தனர்.

சென்னைக்கு அழைத்து வரப்பட்டவுடன் வேப்பம்பட்டில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்றனர் போலீசார். அங்கு அவர் காளிமுத்துவை எவ்வாறு கொலை செய்தார் என்பதை நடித்துக் காட்டினார். அதனை போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர்.

பிறகு விசாரணையில் சுஜாதா திடுக்கிடும் விதமான தகவல்கள் பலவற்றை கூறியுள்ளார்.

அவரது வாக்குமூலம் வருமாறு:

எனது சொந்த ஊர் மதுரை அருகேயுள்ள வாடிப்பட்டியில் ஒரு சிறிய கிராம. என்னுடைய தந்தை அரசுப் பேர்ந்தில் டிக்கெட் பரிசோதகராகப் பணியாற்றிவந்தார். அவர் இறந்து போனார். பிறகு நான் திருமணமாகி சென்னை வந்துவிட்டேன். வேப்பம்பட்டில் வீடு எடுத்து தங்கியிருந்தேன்.

திருமணமான ஒருசில மாதத்திலேயே எனது முதல் கணவர் பிரிந்து விட்டார். பின்னர் தனிமையில் இருந்த எனக்கு மதுரையைச் சேர்ந்த முருகேசன் அறிமுகமானார். இவரைத் திருமணம் செய்து கொண்டேன். எம்.பி.ஏ. படிப்பை தொலைதூரக் கல்வி மூலம் படித்து வந்தேன். இதற்காக நான் மின்சார ரெயிலில் வேப்பம்பட்டிலிருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையம் வருவேன். இந்த சமயத்தில்தான் முட்டை வியாபாரி காளிமுத்து பழக்கமானார்.

அவர் எப்பவும் நிறைய நகைகளையும் பணத்தையும் வைத்திருப்பார். இதனால் அவரது பார்வையை என் பக்கம் திருப்ப செக்ஸ் ஆசை காட்டி மயக்கினேன். என் செல்போன் எண்ணை அவருக்குக் கொடுத்தேன், தினமும் பேசுவோம், நெருக்கம் அதிகமானது.

பலமுறை அவருடன் பல்வேறு இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்தோம். எனக்கு அவரது பணம் மற்றும் நகை மேல் குறி இருந்தது. இதனால் அவரைக் கொலை செய்யும் எண்ணமும் தோன்றியது. நான் கணவர் முருகேசனிடம் இதனைக் கூறினேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார்.

சிறுசிறு திருட்ட்களை செய்து கொண்டே ஆட்டிறைச்சிக் கடையில் வேலை செய்து வந்த என் கணவரின் நண்பர் வேலுவையும் ஆசை வார்த்தைப் பேசி உதவிக்கு சம்மதிக்க வைத்தோம்.

இந்த நிலையில் 30ஆம் தேதி காளிமுத்துவை வீட்டிற்கு வருமாறு அழைத்தேன், அவர் நீ வேண்டுமானால் வில்லிவாக்கம் வா என்றார். ஆனால் நான் மீண்டும் அவரை செக்ஸ் ஆசை காட்டினேன் அவர் இங்கு வர ஒப்புக் கொண்டார்.

வரும்போது மதுபாட்டில்களும் பிரியாணியும் வாங்கி வரவேண்டும் என்று அவரிடம் கூறினேன், அவரும் மது பாட்டிலும் பிரியாணியும் வாங்கி வந்தார். என் கணவர் முருகேசனும் வேலுவும் காளிமுத்துவை கொலை செய்ய கழிப்பறையில் பதுங்கியிருந்தனர்.

இருவரும் மது அருந்தினோம், அவர் மது மயக்கத்தில் இருந்தபோது கழிப்பறையில் இருந்த என் கணவரும், வேலுவும் வந்து அவரது கை கால்களை பிடித்துக் கொண்டனர். காளிமுத்துவின் அலறல் சத்தம் கேட்காமல் இருக்க டிவி சத்தத்தை அதிகரித்தேன்.

பிறகு கத்தியை எடுத்து முதலில் நான்தான் காளிமுத்துவை மார்பில் குத்தினேன், அதைத் தொடர்ந்து

வேலு காளிமுத்துவின் கழுத்தை அறுத்தான். காளிமுத்து உயிரி பிரிந்தது. அவர் உடலில் இருந்த 10 சவரன் நகை ரூ.60,000 பணம் ஆகியவற்றையும் எடுத்துக் கொண்டோம்.

ஆனால் காளிமுத்துவின் உடலை என்ன செய்வது என்ற கேள்வி எழுந்தபோது கசாப்புக் கடை வேலு அவர் உடலை துண்டு துண்டாக வெட்டி வெளியே எடுத்துச் செல்லலாம் என்று கூறினான். அதன் படி 12 துண்டுகளாக அவரது உடலை பிளாஸ்டிக் பைகளில் போட்டு காளஹஸ்தி அருகே கொண்டு சென்று எரித்து விடலாம் என்று திட்டமிட்டோம்.

அதன் படியே காளிமுத்துவின் துண்டு உடல் பகுதிகள் அடங்கிய பிளாஸ்டிக் பைகளை நான் வைத்துக் கொண்டு உட்கார என் கணவர் மோட்டார் சைக்கிளை ஓட்டினார். வேலுவும் எரிக்க வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு மற்றொரு இருசக்கர வாகனத்தில் பின்னால் வந்தான்.

85 கிமீ பிணத்தை எடுத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளேயே சென்றோம். மூன்று முறை இடையே காளிமுத்துவின் உடல் இருந்த பை தவறி விழ்ந்தது. இதனால் ஆந்திர மானிலம் பச்சட்டூர் அருகிலேயே பிணத்தை எரித்தோம், ஆனால் தலையை மட்டும் 15கிமீ தள்ளிக் கொண்டு போட்டி விட்டோம்.

அதன் பிறகு வீடு வந்த நான் ரத்தக் கறையை கெமிக்கல் மூலம் போக்கினேன், சுவற்றின் ரத்தக்கறையை போக்க பெயிண்ட் அடித்தேன். 3 நாட்கள் ஒன்றும் நடக்காதது போல் வீட்டிலேயே இருந்தேன், பிறகு வேலு போலீசில் பிடிபட்டவுடந்தான் நான் தலைமறைவானேன்.

புரசைவாக்கத்தில் உள்ள பிரபல நகைக்கடையில் ரூ.30,000 ஆயிரத்திற்கு நகைகள் வாங்கினேன்.காளிமுத்துவிடம் கொள்ளை அடித்த நகைகளை அடகு வைத்து பணம் ஆக்கிக் கொண்டேன். பிறகுதான் விழுப்புரத்தில் உள்ள எனது மாமியார் வீட்டிற்குச் சென்றேன். போலீஸ் அங்கு வந்து என்னைப் பிடித்துவிட்டனர்.

இவ்வாறு கூறியுள்ளார் கொலைகாரி சுஜாதா. இவருக்கு 7ஆம் வகுப்பு படிக்கும் மகள் உள்ளார். இவர் சுஜாதாவின் தாயார் வீட்டில் இருந்து படித்து வருகிறார்.TCNN


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :