காத்தான்குடியில் அமைக்கும் பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும்-BBS


பொதுபல சேனவின் கூட்டம் நேற்று (9) அம்பாறை நகரில் நடைபெற்றிருந்தது. இந்த கூட்டத்தில் உரையாற்றிய பொது பல சேன செயலாளரின் ஞான தேரர் உரையின் ஒலிப்பதிவு தனியார் தொலைக்காட்சிகளில் நேற்று இரவு 9.30 மணி செய்தியில் ஒளிபரப்பானது.

அச் செய்தியில் இருந்து காத்தான்குடியில் அமைக்கும் உலமாக்களுக்குரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தினை உடனடியாக அரசு நிறுத்த வேண்டும். இதனை நிறுத்துமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களுக்கு அம்பாறையில் இருந்து வேண்டுகோள் விடுக்கின்றோம். 

இல்லாவிட்டால் இதற்காக பாரிய ஆர்ப்பாட்டத்தினையும் எதிர்ப்பையும் நாடுபூராவும் நடாத்துவோம்.

இப் பல்கழைக்கழம் காத்தான்குடியில் அமைந்தால் வஹாபி, சூபி ஊடாக இஸ்லாமிய பயங்கரவாதம் இலங்கையில் உருவாகும். 

இப் பல்கலைக்கழகம் அமைப்பதையிட்டு எமது எதிர்பபை தெரவிக்கின்றோம். இப் பல்கலைக்கழகத்தினால் எமது நாடு பாரிய அச்சுருத்தலை எதிர்நோக்கும்” என ஞானதேரர் தெரிவித்திருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :