உடலுறவுக்காக தனது பள்ளியில் பயின்ற 14 வயது மாணவிகளில் 6 பேருக்கு ஹோட்டலில் ரூம் போட்ட பள்ளி அதிபரும், அதற்கு உடந்தையாக இருந்த ஊழியர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இக் கொடிய சம்பவம், சீனாவின் Hainan மாகாணத்தில் உள்ள பள்ளி ஒன்றில் அதிபராக பணிபுரிந்த Chen என்ற நபரால் நடந்தேறியுள்ளது.
குறித்த சம்பவ தினத்தன்று அம் மாணவிகள் 6 பேரும் வகுப்புக்கு வராததால், அது தொடர்பில் அவ் வகுப்பு ஆசிரியரால், அம் மாணவிகளின் பெற்றோருக்கு அறிவுறுத்தப்பட்டது.
பெற்ரோர்கள், தமது பிள்ளைகளை மிரட்டி கேட்ட போது, குறித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அதிபர் தம்மை ஓட்டல் ஒன்றுக்கு அழைத்து சென்று, உடலுறவுக்கு உட்படுத்தியதாக அம் மாணவிகள் வாக்குமூலம் அளித்தனர்.
இதன் அடிப்படையில், குறித்த அதிபரும், இச் சம்பவத்துக்கு உடந்தையாக இருந்த பள்ளி ஊழியரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம் மாணவிகள் 6 பேரும் மனநல சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
0 comments :
Post a Comment