டெல்லி பொலிசார் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த்தை கைது செய்தபோது ஹோட்டல் அறையில் அவருடன் இருந்த மராத்திய நடிகையிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.
ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்ஸிங் செய்த குற்றத்திற்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஸ்ரீசாந்த் உள்பட 3 வீரர்களை டெல்லி பொலிசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கைது செய்தனர்.
ஸ்ரீசாந்த்தை கைது செய்தபோது அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் அவருடன் இரு மாடல் அழகிகளும், மராத்திய நடிகை ஒருவரும் இருந்துள்ளனர்.
பொலிசார் அந்த மராத்திய நடிகையிடம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால் அந்த நடிகை யார் என்ற விவரத்தை தெரிவிக்க பொலிசார் மறுத்துவிட்டனர்.
சூதாட்டக் கும்பல் இந்த நடிகையை பயன்படுத்தி ஸ்ரீசாந்திடம் வேலை வாங்கி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஸ்ரீசாந்த் அறையில் இருந்து அவரது மடிக்கனணிகள், டேட்டா கார்டு, ஐபேட், டைரிகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி ஆகியற்றை பொலிசார் பறிமுதல் செய்தனர்.
ஸ்ரீசாந்த் மீது மும்பை பொலிசாரும் வழக்குப் பதிவு செய்யக்கூடும் என்று தெரிகிறது.
இதேவேளை, ஸ்பாட் பிக்ஸிங் தொடர்பாக சென்னையில் ஆறு தரகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரித்ததில் சென்னையில் மேலும் 20 தரகர்கள் இருப்பது தெரியவந்துள்ளது.
அதில் 12 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சூதாட்ட கும்பலின் தலைவன் பிரசாந்த, மனைவி, மகன்களுடன் தென்னாப்பிரிக்காவுக்கு தப்பியோடிவிட்டார்.
பிரசாந்துக்கு யாருடன் எல்லாம் தொடர்பு இருந்தது என்று தற்போது சிறையில் இருக்கும் ஆறு தரகர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
மேலும் அயனாவரத்தில் உள்ள பிரசாந்தின் சொகுசு பங்களாவில் சோதனை நடத்த பொலிசார் திட்டமிட்டுள்ளனர். பிரசாந்தும், தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளும் சிக்கினால் கிரிக்கெட் சூதாட்டம் பற்றி பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 comments :
Post a Comment