அக்கரைப்பற்று வலயத்தில் உள்ள அட்டாளைச்சேனை அந்நூர் மஹாவித்தியாலயத்தில் மாணவர்கள், இருந்து கல்வி கற்பதற்கு சரியான கட்டிட வசதி இல்லாத காரணமாக வெளியிலும் மரநிழல்களிலும் இருக்க வேண்டிய நிலமை உள்ளதாக மாணவர்களும் பெற்றோர்களும் எமது இம்போட் மிரர் இணையத்துக்கு கவலையுடன் தெரிவித்தனர்.
உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஒதுக்கியிருக்கும் கட்டிடம் மழை வந்தால் உள்ளே இருக்க முடியாது மழைநீர் உள்ளே வரும், அது போன்று வெயில் காலங்களில் உள்ளே இருக்க முடியாதளவு வெப்பமான நிலைமையும் காணப்படுகிறது, மிகவும் பணிந்த பழைய கட்டடம் மேலே சீட் போடப்பட்டுள்ளதால் இன்னும் கஷ்டங்களை எதிர்நோக்குவதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
எனவே இது சம்மந்தப்பட்டவர்கள், அரசியல் வாதிகள், இதற்க்கு சரியான வசதி செய்து தருவார்களா என்று மாணவர்களும் பெற்றோர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.






0 comments :
Post a Comment