தொழிலாளர்களின் நன்மைக்காக ஜனாதிபதி மகிந்தவின் அரசாங்கம் உழைக்கிறது-பிரதமர்


தொழிலாளர்கள் உழைப்பு வீணாகக் கூடாது என்பதில் உறுதியான கொள்கையுடன் செயற்படும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அரசாங்கத்தில் உழைக்கும் மக்கள் மேன்மையடைவார்கள் என பிரதமர் டி.எம்.ஜயரத்ன விடுத்துள்ள மே தின செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நிலப்பிரபுத்துவ முறைமை வீழ்ச்சியடைந்ததும் முதலாளித்துவ பொருளாதார முறை ஐரோப்பாவில் பரவியதை தொடர்ந்து தொழிலாளர் என்ற தனிநபர் பிரிவு தோற்றம் பெற்றது. முதலாளியின் தேவையினை நிறைவேற்றிக்கொள்வதற்கு தொழிலாளியின் உழைப்பு தொடர்ந்தும் சுரண்டப்பட்டது.

இதன் விளைவாக அன்று சிக்காக்கோவில் வாழ்ந்த தொழிலாளர்கள் இற்றைக்கு 127 வருடங்களுக்கு முன்னர் சர்வதேச தொழிலாளர் வர்க்கத்தின் முதற்கட்ட வெற்றியை எடுத்தியம்பி போராட்டத்தினை ஆரம்பித்தனர்.

பொருளாதார ரீதியாக பிளவுபட்ட சமூகமொன்றில் வாழும் வகுப்பினரிடையே ஏற்ப்பட்ட அழுத்தம் காரணமாக தொழிலாளர் போராட்டம் உருவாகியது. அச்சம், சந்தேகமற்ற வாழ்வதற்கு பொறுத்தமான சூழல் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் போன்றே துறைமுகம், மின் உற்பத்தி நிலையங்கள், பெருந்தெருக்கள், விமான நிலையம், பாலங்கள், பாரிய நீர்த்தேக்கங்கள் போன்ற பாரிய பல அபிவிருத்தி திட்டங்களை ஆரம்பித்து அதனை அனுபவிக்கும் தருணத்தில் நாம் இருக்கின்றோம்.

 இத்தருணத்தில் தொழிலாளர்களின் தலைவரான அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எப்போதும் தொழிலாளர் வர்க்கத்தை சார்ந்தே செயற்படுகின்றார். இந்நிலையில் ஆசியாவின் புதமையாக இலங்கையினை மாற்றியமைக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் தொழிலாளர் வர்க்கத்தினரின் ஒத்துழைப்பு அத்தியாவசியமானது என தான் சுட்டிக்காட்ட விரும்புவதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

 இன்றைய தினம் சர்வதேச தொழிலாளர் தினம் அவர்களுக்கு சகல வழிகளிலும் சிறப்பாக அமைய வேண்டுமென வாழ்த்துவதாக பிரதமர் டி.எம்.ஜயரத்ன விடுத்துள்ள மே தின செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :