விபசாரத்தை தடுக்க அசிட் வீசப்படும் நீர்கொழும்பு நகரில் புதிய வழிமுறை.

வீதியோரங்களில் நின்று விபசார நடவடிக்கைகளில் ஈடுபடும் பெண்களுக்கு அசிட் வீச்சு மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுத்து நீர்கொழும்பு நகரின் பல இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறிப்பாக வைத்தியசாலை அருகில் கடந்த வாரம் இதே போன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டடிருந்தன. இதனை தொடர்ந்து அப்பிரதேசத்தில் நடமாடி வந்த விபசாரிகளை குறைவடைந்த நிலையில் நேற்றுவியாழக்கழமை இரவு முதல் மீண்டும் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நீர்கொழும்பு நகரின் ஹோட்டகளிலும், சட்டவிரோதமாக நடத்தப்படும் விபசார விடுதிகளிலும் பாதுகாப்புடன் பெண்கள் பலர் விபசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வீதியோரத்தில் நின்றபடி விபசாரத்திற்காக ஆண்களை அழைக்கும்; பெண்களுக்கு இந்த எச்சரிக்கையானது அவர்களை பெரிதும் அச்சம் கொள்ளச் செய்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.

விபசாரத்தை ஒழிப்பதற்கு உடனடியாக ஒன்று சேருவோம், விபசாரிகளுக்கு இனிமேல் தண்டனை அசிட் ஆகும் போன்ற வாசகங்கள் சிங்களத்தில் எழுதப்பட்ட சுவரொட்டிகளே இனந்தெரியாத நபர்களால் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :