ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையை புனரமைத்த அக்கரைப்பற்று பொலிசார்.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

மிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையை அக்கரைப்பற்று பொலிஸார் சிரமதான அடிப்படையில் புனரமைத்து துப்புரவு செய்ததுடன் வைத்தியசாலையை வர்ணப்பூச்சினால் அழகு படுத்தியுள்ளனர்.

இவ்வாறு புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தப்பட்ட வைத்தியசாலையை கிழக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு ) திறந்து வைத்தார்.

ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையின் வைத்தியப் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.ஹம்மாம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் மற்றும் மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள், சிறப்பு அதிதிகளினால் பரிசுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வுகளில் அதிதிகளாக அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா, கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவித் தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா உட்பட பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :