தேசிய சமாதானப் பேரவை ட்ரூவிஷன் அமைப்புடன் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் செயற்படுத்தி வரும் சமாதானத்திற்கான பங்களிப்பு செயற்திட்டத்திற்கமைவாக ட்ரூவிஷன் அமைப்பின் செயற்திறனை மேம்படுத்தும் பொருட்டு ஒரு தொகுதி அலுவலக உபகரணங்களை வழங்கும் நிகழ்வு நேற்று (13.01.2013) அட்டாளைச்சேனை ட்ரூவிஷன் அமைப்பின் கூட்ட மண்டத்தில் இடம்பெற்றது.
ட்ரூவிஷன் அமைப்பின் தலைவரும் சட்டத்தரணியுமான உவைஸ் அப்துல் காதரிடம் தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்ட முகாமையாளர் தேவராஜா வைகுந்தன் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வுக்கு தேசிய சமாதானப் பேரவையின் உதவி செயற்திட்ட முகாமையாளர் சாந்த லுனுஹேவல, அம்பாறை மாவட்ட வெளிக்கள இணைப்பாளர் எம்.ஏ.றம்ஸி மற்று பல கல்விமான்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment