அக்கரைப்பற்றில் வாகன விபத்து 28 வயதான இளைஞர் பலி மற்றுமொருவர் படுகாயம்.


அக்கரைப்பற்று பொத்துவில் வீதியின் பஸ் டிப்போவுக்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரே பலியானதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.
அக்கரைப்பற்றிலிருந்து சின்னமுகத்துவாரம் நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் மின்கம்பத்தில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த மற்றுமொரு இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
நீதவான் விசாரணைகளின்  பின்னர் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெற்றன.
28 வயதான இளைஞர் ஒருவரே விபத்தில் உயிரிழந்ததுடன் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
இதேவேளை, கம்பளை- கண்டி  பிரதான வீதியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் சார்ஜன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குருதெனிய எரிபொருள் நிரப்பும் நிலையமருகில் லொறியில் மோதி குறித்த பொலிஸ் சார்ஜன் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்தில் காயமடைந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரும் பிரதேச வாசியும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பாக லொறி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :