ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுமார் 250 மீனவர்கள் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்

(எம்.ஐ.றியாஸ்)
ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட சுமார் 250 மீனவர்கள் இன்று வெள்ளிக்கிழமை (04.01.2013) மாலை ஆலையடிவேம்பு பிரதேச கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவிடம் சிறிலாங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர் இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.ஜெயாகர் ஆலையடிவேம்பு பிரதேச செயலக கடற்றொழில் பரிசோதகர் என்.கந்தசாமி மாவட்ட மீனவர் சம்மேளனத்தலைவர் இ.துரைராஜா உட்பட பலா் கலந்து கொண்டனர்.  

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட அக்கரைப்பற்று-8 ,9 சின்னமுகத்துவாராம் அலிக்கம்பை       நாவற்காடு, பனங்காடு, கோளாவில்,இத்தியடி.ஆலையடிவேம்பு,கன்னகிகிராமம் போன்ற கிராமப்பிரிவுகளில் வதியும் மீனவர்கள் சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் இணைந்து கொண்டனர்.
இதே வேளை கடந்த வியாழக்கிழமை ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வில் 300 இளம் பட்டதாரிகள் பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ஜெயாகரின் ஏற்பாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவிடம் சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்டனர்.இந்நிகழ்வுகளில் பிரதேச செயலாளர்களான எம்.கோபாலரெட்ணம், எஸ்.கரன் கே.லவநாதன், வீ.ஜெகதீசன்,பாராளுமன்ற உறுப்பினரின் ஊடக இணைப்பாளர் எம்.ஐ.றியாஸ் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ரி.விக்னேஸ்வரன் மாவட்ட இணைப்பாளர் எஸ்.நந்தகுமார் உட்பட அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :