கல்முனைக்கு நல்ல பல சேவைகளை செய்து விட்டு மக்களிடம் எடுத்து கூறாததுதான் நான் செய்த தவறு -ஹரீஸ் எம்.பி.


(vk;.ig\y; ,];khapy;) 
அடுத்த ஆண்டில் கல்முனை மாநகர பிரதேசங்களில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கு பல ஆக்கபூர்வான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றேன் என அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

காத்தான்குடியில் இருப்பது போன்று பிரதான வீதியில் அழகிய மரங்கள் நடப்படுவதனையே அபிவிருத்தி என்று நமது கல்முனை மக்கள் நினைக்கிறார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை தனது கல்முனை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே ஹரீஸ் எம்.பி. இதனைக் குறிப்பிட்டார்.

“கல்முனையில் என்னால் எவ்வளவோ அபிவிருத்திப் பணிகள் முன்னெடுத்துச் செல்லப்பட்ட போதிலும் எதுவுமே நடக்கவில்லை- நான் எதுவுமே செய்யவில்லை என்றே மக்களிடம் சொல்லப்படுகிறது. இது உண்மைக்குப் புறம்பான நிலைப்பாடாகும்.

நான் செய்தவற்றை மக்கள் மத்தியில் எடுத்துக் கூற தவறியமையினாலேயே இவ்வாறான தப்பபிப்பிராயம் நிலவுகிறது. எனினும் ஏனைய பகுதிகளுடன் ஒப்பிடும்போது கல்முனை பிரதேசம் அபிவிருத்தியில் பின்தங்கியுள்ளமைக்கு அண்மைக்கால அரசியல் மாற்றங்களே பிரதான காரணமாக உள்ளது.

அதேவேளை கல்முனை பிரதேசத்தில் உள்ள மக்கள் காத்தான்குடியில் இருப்பது போன்று பிரதான வீதியில் அழகிய மரங்கள் நடப்படுவதனையே அபிவிருத்தி என்று நினைக்கிறார்கள் போலும். கல்முனையிலுள்ள ஒவ்வொரு ஊரிலும் நடந்தவற்றை இந்த மக்கள் சற்றும் அறியாதவர்களாக இருக்கின்றார்கள்.

நமது பிரதான வீதியில் அதிவிசேட வீதி மின் விளக்குகளை நான் கல்முனை மாநகர மேயராக இருந்த காலத்தில் அறிமுகப்படுத்திய பின்னர் தான் காத்தான்குடி மற்றும் அக்கரைப்பற்று பிரதேசங்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள்.

அரசியல் ரீதியில் கல்முனை பிரதேசம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செல்வாக்கில் இருப்பதால் அரசுடன் இணைந்து செயல்படுவதில் கடந்த காலங்களில் பல சிக்கல்கள் தோன்றியிருந்தது. அதனால் பாரிய அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதில் எமக்கு அடிக்கடி தடைகள் ஏற்பட்டிருந்தது. இருந்தும் அந்த தடைகளையும் மீறி சில அபிவிருத்தி பணிகளை முன்னெடுத்துச் சென்றுள்ளேன்.

இப்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியாக உள்ளமையினால் எதிர்காலத்தில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சகல பிரதேசங்களையும் பாரியயளவில் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளேன். நிச்சயம் அவை சாத்தியப்படும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.

அத்துடன் இப்பகுதி மீனவர்களினதும் விவசாயிகளினதும் வர்த்தகர்களினதும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காண்பதற்கும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றேன். ஒலுவில் துறைமுகம் செயற்பட தொடங்கியதும் கல்முனை பிரதேச மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய பிரச்சினை தீர்ந்து விடும்.

அத்துடன் பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் கண்டறியப்பட்டு அவையும் தீர்த்து வைக்கப்படும். கல்முனை மாநகரை அழகுபடுத்தும் திட்டத்திற்கு பிரதான வீதி இன்னும் விரிவாக்கப்பட வேண்டியுள்ளது. கல்முனை பிரதான வீதி அகலமின்றி காணப்படுவதனால் அடிக்கடி வீதி விபத்துக்கள் இடம்பெறுகின்றன. இதற்கும் தீர்வு காண வேண்டியுள்ளது. இதற்கு வர்த்தகர்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகும்.

ஆகையினால் அடுத்த வருடம் கல்முனைப் பிரதேசத்திற்கு நல்ல காலமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம். அதற்கான பாரிய முயற்சிகளில் நான் ஈடுபட்டுள்ளேன்” என்றும் ஹரீஸ் எம்.பி.குறிப்பிட்டார்


அப்படியோ பேஸ்புக் இல் லைக் என்னும் பட்டானை கிளிக் பன்னுங்க நன்றி..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :