தனிநபர்களாக அமைச்சு பதவிக்கு அலைபவர்கள் சமூக துரோகிகளே!


(கல்முனை)

முஸ்லீம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு ஆன்மீக ஒழுக்கப்பயிற்சி அவசியம். இன்று மு.கா முஸ்லீம்களின் உரிமைக் குரலாக இருப்பதற்கு மாற்றமாக வியபார குறியீடாக சிலர் பயன்படுத்துகின்றனர்.


பிழைகளை சுட்டிகாட்டுகின்ற பொழுது நீர் ஊற்றினார்களா பசளை போட்டார்களா என்று சிறுபிள்ளை  தனமாக பத்திரிகை மகாநாடு  வைக்கின்றனர்.  வடக்கில் இருந்து கிழக்கு வரை நடந்த இனச்சுத்திகரிப்பின் உயிர் பலிகளாலும் விரட்டியடிப்புக்களாலும் வேரூன்றி வளர்ந்ததுதான் முஸ்லிம் காங்கிரஸ் என்பதை மறந்துவிடவேண்டாம்.   இன்று சலுகைகளுக்காக அதன் பாதையை திசை திருப்பி சில அரசியல் வாதிகளும் அவர்களுடன் சிலரும் அநியாயம் புரிவது கவலையளிக்கிறது. 

போராளிகளே சலுகை கோருகின்றார்கள், எதிர்கட்சியில் இருந்து அரசியல் செய்யமுடியாதென்று  கூறுகின்றார்கள் என்று நியாயம் கற்பிக்கப்பட்கின்றது. ஒரு உண்மையான முஸ்லிம் தனது அனைத்து காரியங்களையும் அல்லாஹுவிடம் தொடர்பு படுத்தியே பார்க்கின்றான். சத்தியத்தின் பாதையில் நடப்பவன் சலுகைகளுக்காக சமூகத்தை காட்டிக்கொடுக்கமாட்டான். தனிநபர்களாக அமைச்சு பதவிக்கு அலைந்தவர்கள் சமூகதுரோகிகளே.

இன்று முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் ஒரு சரியான முடிவை எடுக்கமுடியாமல் இருபதற்கு ஒரு சிலரின் அழுத்தமும் காரணமாக இருக்கிறது. தனிமனிதர்களின் விருப்பங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க முயற்சிக்கின்ற நிலையில்தான் பிளவுகளும் பலம் குன்றிய நிலையும் காணப்படுகின்றது.

தடி எடுத்தவர்கள் எல்லாம் வேட்டைக்காரனாக முடியாது. முஸ்லிம் காங்கிரஸ் உற்பத்தி செய்தவர்களில் அல்லாஹுவையும் அவனது ரசூலையும் நேசிக்கின்ற, மக்களின் அமானிதங்களை அஞ்சுகின்ற, மரணத்தை நேசிக்கின்ற தற்துணிவோடு பேசுகின்றவர்கள் எத்தனை பேர் ???.

காங்கிரசுக்கு முன்னால் "முஸ்லிம்" என்று வந்த காரணத்தினால்தான் அதன்மீதான விமர்சனம் எழுகின்றது. அந்த சொல்லின் அர்த்தத்தை பிரதிபலிக்கமுடியாதவர்கள் அதில் இருப்பது அல்லாஹுவையும் அவனது தூதரையும் விற்று வியாபாரம் செய்கின்ற அக்கிரமத்தை புரிவதாகும்.

இவர்களுக்கு வாக்களித்து சாட்சி   சொன்னவர்களும் அநியாயகாரர்காளவார்கள். "பொது பல சேன" பற்றிய அரசின் கருத்து நல்ல விடயமாக தெரிய வில்லை.மு.கா வினுள் களையெடுப்பு அவசியமாகிறது. எல்லா முஸ்லிம் தலைவர்களும் அல்லாஹுவையும் மரணத்தையும் நினைவு கூரட்டும்.  

அல்லாஹ் அனைவரின் இருதயத்திலும் ஈமானை நிலைநிறுத்த உதவி புரிவானாக! 

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :