(பி. முஹாஜிரீன்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக சமூக விஞ்ஞானத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்திலுள்ள பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான முழுநாள் பயிற்சி செயலமர்வு இன்று சனிக்கிழமை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெற்றது.
சமூக விஞ்ஞானத் துறைத்றைத் தலைவர் எம்.அப்துல் ஜப்பார் தலைமையில்
'நீடித்து நிலைக்கக் கூடிய ஒரு சமூகத்திற்காக ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்தி' எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இப்பயிற்சி செயலமர்வுக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எஸ்.எம். முகம்மது இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் மொழித்துறைத் தலைவர் கலாநிதி எம்.ஏ. முகம்மட் றமீஸ் அப்துல்லா, சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.றியாழ் ஆகியோர் வளவாளர்களாகவும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்டத்திலுள்ள திருக்கோவில், அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை ஆகிய நான்கு கல்வி வலயங்களிலிருந்து பதிவு செய்யப்பட்ட முன்பள்ளிகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 200 முன்பள்ளி ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.
ஆரம்ப பிள்ளைப் பருவ அபிவிருத்திக்கான பயனள்ள கல்வித் திட்டம், தொடர்பாடலும் முன்பள்ளிச் சிறுவர்களும், முன்பள்ளிக் கல்வியும் முகாமைத்துவமும், முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம், பிள்ளைப்பருவ ஆளுமை மற்றும் நடத்தை விருத்தி, ஆரம்ப பிள்ளைப் பருவமும் பாலர்பாடசாலைகளும் ஆகிய தலைப்புக்களில் இச்செயலமர்வில் விரிவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
பயிற்சி நிறைவில் கலந்து கொண்ட அனைத்து பங்குபற்றுனர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டன.
0 comments :
Post a Comment