ஆலையடிவேம்பு விபுலானந்தா பாலர் பாடசாலையின் விடுகை விழா - 2012





( ஏ.எல. ஜனூவர் )
ஆலையடிவேம்பு விபுலானந்தா பாலர் பாடசாலையின் 21வது வருட கலை  விhவும், விடுகை வழாவும் சுவாமி விபுலாந்தா சிறுவர் அபிவிருத்தி நிலையப் பொறுப்பதிகாரி இறைபணிச் செம்மல் திரு. த. கைலாயப்பிள்ளை தலைமையில் பிரதேச சபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசனம், வீடமைப்பும் நிர்மாணமும், கிரதமிய மின்சாரம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை கலந்து கொண்டார்.

இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர்

இந்த நாட்டிலே வாழுகின்ற ஒவ்வொருவரும் தங்களுடைய மார்க்கத்திடனுடம், மத கலாச்சாரத்துடனும் வாழ்வார்களாயின் நமக்கிடையே எந்த பேதமும்  இருக்காது, எங்களுடைய சமய அனுஷ்டானங்களை முறையாக பின்பற்றுவோமேயானால் நிறைய பிரச்சினைகளுக்கு தீர்வு வந்துவிடும் அதற்கேற்றால் போல் நமது எதிர்கால சந்ததினரையும் வளர்த்தெடுக்க வேண்டும் என்று கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

மாணவ, மாணவிகளின் கலை கலாச்சார நிகழ்வுகள் இடம்பெற்ற தோடு மணாவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.


இந் நிகழ்வில் மாகாண சபை உறுப்பினர்களான டீ. கலையரசன், எம். இராஜேஸ்வரன், பிரதேச செயலாளர் திருவாளர் வீ. ஜெகதீசன்,பிரதேச சபைத் தவிசாளர் கே. இரத்தினவேல், சிறுவர் நன்னடத்தை இல்ல அதிகாரி ஏ.எல்.எம். உதுமாலெப்பை  உட்பட பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.  


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :