அக்கரைப்பற்று-06ல் நுளம்பு வலைகள் வழங்கும் வைபவம்
பிரதேச சுகாதார வைத்திய காரியாலயமும் அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவும் இணைந்து டெங்கு நோயிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு 80 நுளம்பு வலைகள் முதியோர்களுக்கு 28.12.2012ல் கி.அ.மு.குழு காரியாலயத்தில் அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.;; தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஐ.எல்.சித்தீக் அவர்களின் வழிகாட்டலில் பொது சுகாதார பரிசோதகர் ஈ.ரி.சலீம் மற்றும் கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு பொருளாளரும் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவருமான எம்;.ஐ.எம்.யூசுப் பங்குபற்றினர்.
இந்நிகழ்வில் முதியோர்களுக்கு அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும் கி.அ.மு.குழு செயலாளருமான சாமஸ்ரீ தேசமானி என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.இ பொது சுகாதார பரிசோதகர் ஈ.ரி.சலீம்இ கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழு பொருளாளரும் சிரேஷ்ட பிரஜைகள் அமைப்பின் தலைவருமான எம்;.ஐ.எம்.யூசுப் நுளம்பு வலை வழங்குவதைப் படத்தில் காணலாம்.

0 comments :
Post a Comment