ஜாகீர்கானின் உடற்தகுதியில் சந்தேகம்: இங்கிலாந்துக்கு எதிராக விளையாடுவாரா?



உலக கிண்ண போட்டிக்கு பிறகு இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் மிக மோசமாக ஆடிவருகிறார்.
அவரின் நேர்த்தியான, பவுன்சர் பந்துவீச்சு சமீபகால ஆட்டங்களில் பார்க்க முடியவில்லை. மேலும் முன்பைவிட தற்போது அவர் குறைவான வேகத்திலேயே பந்து வீசுகிறார். அடிக்கடி உடல்தகுதி சர்ச்சையிலும் சிக்கிவருகிறார்.
தற்போது நடைபெற உள்ள இங்கிலாந்து தொடருக்கு தயாராகும் விதமாக கடந்த வாரம் ரஞ்சி கிண்ண போட்டியில் ஜாகீர்கான் ஆடினார்.
ரயில்வேஸ் அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் தசைபிடிப்பு காரணமாக அவர் வெளியேறினார். இதன் காரணமாக ஏற்பட்ட வலி இன்னும் குணமடையவில்லை.
இந்நிலையில் மும்பை பார்பரோன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கிய 3 நாள் பயிற்சி முகாமில் ஜாகீர்கான் கலந்து கொண்டார்.
எனினும் அவர் முழு நேர பயிற்சியில் ஈடுபடவில்லை. 25 முதல் 30 பந்துகளை மட்டுமே வீசினார்.
அவ்வப்போது அணியின் உடற்பயிற்சி நிபுணர் இவான் ஸ்பீச்லி, ஜாகீர்கானுக்கு உதவியும் செய்தார். முதல் டெஸ்ட் 15ஆம் திகதி தொடங்க உள்ள நிலையில் ஜாகீர்கானின் உடல்தகுதி பிரச்னையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :