கண்ணீருடன் நன்றி கூறினார் ஒபாமா

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதற்கான அறிவிப்பு வெளியானவுடன், சிகாகோவில் உள்ள தனது தலைமை பிரசார
அலுவலகத்துக்கு ஒபாமா நேரில் சென்றார். அங்கிருந்த நிர்வாகிகளை சந்தித்து, மீண்டும் தான் வெற்றி பெற கடுமையாக உழைத்ததற்காக நன்றி தெரிவித்து கொண்டார். அவர்கள் மத்தியில் ஒபாமா பேசுகையில், சிகாகோவில் நான் சிறுவனாக இருந்த போது தன்னார்வ தொண்டுகளில் பணியாற்ற முயற்சி செய்திருக்கிறேன்.

ஆனால், நீங்கள் என்னை விட திறமையானவர்கள், அமைப்பு ரீதியாக செயல்படுகிறீர்கள். உங்கள் வாழ்க்கையில் பெரிய சாதனைகளை படைப்பீர்கள். உங்களை நினைத்து பெருமையாக இருக்கிறது. மீண்டும் என்னை அதிபராக்க நீங்கள் செய்த உதவியை மறக்க மாட்டேன் என்று பேசினார். அப்போது திடீரென அவரால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. கண்களில் கண்ணீர் வழிய ஒரு வழியாக பேசி முடித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :