Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- news@importmirror.com Admin-message


Headlines
Loading...
Admin-message

பதிவு செய்யப்படாத டியூட்டரிகள் (தனியார் கல்வி நிலையம்) மீது சட்ட நடவடிக்கை.! -கல்முனை மாநகர சபை அறிவிப்பு.


ஏயெஸ் மெளலானா-

ல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் இல்லையேல் சம்மந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள விஷேட அறிவித்தலில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற பல தனியார் கல்வி நிலையங்கள் மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் இன்னும் பல தனியார் கல்வி நிலையங்கள் தம்மை பதிவு செய்து கொள்ளாமல் இயங்கி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான நிறுவனங்கள் மாநகர சபையில் தம்மைப் பதிவு செய்து கொள்ளாமல் இயங்குவதானது சட்டவிரோத செயற்பாடாகும் என்பதை சம்மந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும், போதைப்பொருள் பாவனையில் இருந்தும் கலாசார சீர்கேடுகளில் இருந்தும் மாணவர்களை பாதுகாத்து, நெறிப்படுத்தும் பொருட்டு ஜம்மியத்துல் உலமா சபை உள்ளிட்ட பொது அமைப்புகளின் வேண்டுகோளின் பேரில் பொருத்தமற்ற நேரங்களில் டியூசன் வகுப்புகள் நடத்தப்படுவதை கட்டுப்படுத்தும் பொருட்டு தனியார் கல்வி நிலையங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகள் எமது மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்களினால் இந்நடவடிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படுத்தப்படுவதையும் அவதானிக்க முடிகிறது.

ஆகையினால், அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, அவற்றை கட்டுக்கோப்புடன் முறையாக ஒழுங்குபடுத்துவதற்கு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனவே, இதுவரை பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்கள் அனைத்தும் எதிர்வரும் 22 ஆம் திகதிக்கு முன்னதாக மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என்று இத்தால் அறிவுறுத்தப்படுகிறது.

குறித்த காலப்பகுதியினுள் பதிவு செய்யப்படாத தனியார் கல்வி நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் நடத்துனர்கள் மீது மாநகர சபைகள் கட்டளை சட்டத்தின் கீழ் நீதிமன்றம் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன் அவற்றை மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறியத்தருகின்றேன்.

அத்துடன் வீடுகளில் தனிப்பட்ட முறையில் ஆசிரியர்களினால் நடத்தப்படும் ஆரம்பக் கல்வி மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைக்கான மேலதிக வகுப்புகளுக்கும் இவ்வறிவுறுத்தல் பொருத்தமானது என்பதைக் கருத்தில் கொண்டு, அவர்களும் தம்மை ஒரு கல்வி நிலையமாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் இத்தால் அறிவுறுத்தப்படுகின்றனர்- என்று கல்முனை மாநகர ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.