ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வு



ஏறாவூர் சாதிக் அகமட்-
ட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இரத்தம் தட்டுப்பாடு நிலவி வருவதாகவும், இதனால் இரத்த தானம் வழங்கி வைப்பதற்கு முன்வருமாறும் மட்டக்களப்பு இரத்த வங்கியின் வேண்டுகோலுக்கிணங்க தற்போது ஏறாவூர் அல் முனீறா பாலிகா மகா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான நிகழ்வொன்றினை நடாத்தி வருகின்றனர். இந்நிகழ்வினை ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஸாபிறா வஷீம் அவர்கள் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்ததுடன் ஏறாவூர் பிரதேச செயலக சமூக சேவை உத்தியோகத்தர் SAC நஜிமுதீன் அவர்களும், சமூக சேசேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் தலைவர் MFM. பாறூக் அவர்களும் LIONS CLUB இன் தலைவர் ARM. ஆஷிக் அவர்ளும் மற்றும் ஏறாவூர் மெகா பவர் பிரபல வர்த்தக உரிமையாளர் ஜெலில் ஹாஜியார் ஆகியோரும் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி ஸாபிறா வஷீம் அவர்கள் ஊரில் பல சமூக சேவைகள் அமைப்பு செயற்பட்டு வந்தாலும் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியத்தின் செயற்பாடானது மிகவும் பாராட்டத்தக்கது, அதற்கெடுத்துக்காட்டாக இவ்வமைப்பானது கடந்த கொரோணா காலங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தோடு இணைந்து இரவு பகல் பாராது இவ்வமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் எம்மோடு இணைந்து செயற்பட்டதனையும் எடுத்துக் கூறலாம் எனத் தெரிவித்தார் .மேலும் இங்கு கருத்து தெரித்த ஏறாவூர் மெகா பவர் காட்சியறையின் உரிமையாளரும் பிரபல வர்த்தகருமாகிய ஜலீல் ஹாஜியார் அவர்கள் சமூக சேவைகள் அபிவிருத்தி ஒன்றியமானது ஏறாவூரில் கல்வி,சுகாதாரம் , வாழ்வாதாரம் என பல்வேறு வடிவங்களில் மக்களின் தேவையறிந்து மிகவும் சிறப்பாக சேவையாற்றி வருகின்றது எனத் தெரிவித்தார் . இவ்விரத்ததான நிகழ்வில் பெருமளவான மக்கள் இரத்தம் வழங்க ஆர்வத்துடன் வருகை தருவதைக் காணமுடிந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :