Admin-message ********** 100 வீதம் ஆதாரமுள்ள செய்திகளை புகைப்படத்துடன் அனுப்பி வைக்கவும். இம்போட்மிரர் லோகோவுடனான ஒளிவடிவ செய்திகள் அனுப்பும் செய்தியாளர்களுக்கு கொடுப்பனவு வழங்கப்படும். Call- 0776144461 - 0757433331 மின்னஞ்சல்- [email protected] Admin-message


Headlines
Loading...
Admin-message

கிண்ணியாவில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு நிகழ்வு



எம்.எஸ்.எம்.ஸாகிர்-
ண்மையில் வெளியான க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் கிண்ணியா வலயத்திற்குட்பட்ட, 9ஏ சித்தி பெற்ற மாணவர்களைக் கௌரவிக்கும் வைபவம் கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் (10) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிண்ணியா வலயக் கல்வி அலுவலகமும் கலீலா உம்மா பௌண்டேஷனும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வில், கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எ.அனஸ், நகரசபைத் தலைவர் எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் எ. நஸுஹர்கான், கிண்ணியா பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம். றிஷ்வி, நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளர் எம்.எப்.ஏ.மரைக்கார் ஆகியோருடன் பாடசாலை அதிபர்கள், சித்தி எய்திய மாணவர்களின் பெற்றோர்கள் எனப் பலரும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு இளம் சமூக சேவையாளர் முஹமட் முஹைடீன் பைஷல் தலைமை தாங்கியதோடு, 9ஏ சித்தி பெற்ற 20 மாணவர்களுக்கு 5000 ரூபா வீதம் சன்மானமும் வழங்கி வைத்தார்.

முக்கிய குறிப்பு: இம்போட்மிரர் இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு இம்போட்மிரர் நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு இம்போட்மிரருடன் தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம். உண்மை! நேர்மை!! நடுநிலைத்தன்மை எமது குறிக்கோள்!!!
- நிருவாகம் -
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள ..

கருத்துக்களை பதிவு செய்க.

vilamparam post page 1
Powered by Blogger.