ஆயிஷாவை முகம்மது நபி எந்த அடிப்படையில் திருமணம் செய்தார் ? அவரை துஸ்பிரயோகம் செய்தார் என்பதற்கான ஆதாரம் என்ன ?



றைதூதர் முகம்மது நபி அவர்கள் தனது மனைவியான ஆயிஷா அவர்களை துஸ்பிரயோகம் செய்தார் என்ற முகநூல் பதிவொன்றை காரைதீவு பிரதேச தவிசாளர் பகிர்வு செய்துள்ளார்.

அதாவது “ஐந்து வயது ஆயிஷாவை துஸ்பிரயோகம் செய்த உலகின் முதற் சிறுவர் பாலியல் துஸ்பிரயோகி முஹமது நபியை விடவா நான் குற்றம் செய்தேன்” என்பதுதான் அந்த பதிவாகும்.

மக்களை வழிநடாத்துகின்ற பொறுப்புள்ள மக்கள் பிரதிநிதிகள், சமூக ஒற்றுமைக்காக குரல்கொடுக்காமல், இன்னுமொரு சமூகத்தின் மார்க்கத்தை அவமதிக்கும் செயல்களுக்கு துனைபோவதானது, இரு சமூகங்களுக்கிடையில் பகைமயை மூட்டி அதில் தீயை எரியவைத்து அதன்மூலம் அரசியல் குளிர்காய்வதை தவிர வேறொன்றுமில்லை.

இவ்வாறு குரோத மனப்பான்மையுடன் கற்பனையில் கூறப்பட்ட விடயத்திலிருந்து உண்மை வரலாற்றை விளக்குவதுதான் இந்த கட்டுரையின் நோக்கமாகும்.
1400 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த முகம்மது நபி அவர்களது காலம் இன்று உள்ளது போலல்ல. அதாவது பெண்கள் ஆடையின்றியும், தான் பெற்றெடுத்த பெண் குழந்தைகளை உயிருடன் புதைத்தல், மது, கொலை, கொள்ளை, முறையற்ற திருமணம், பலம் உள்ளவன் நினைக்கின்றதே சட்டம் என்று கட்டுப்பாடற்றிருந்த மிகக் கொடூரமான மனிதர்களை நல்வழிப்படுத்தவே முகம்மது நபி அவர்கள் இறை தூதராக அனுப்பப்பட்டார்கள்.

இறைதூதர்கள் கனவு கண்டால் அது வஹீக்கு ஒப்பானதாகும். அதாவது அது இறைவனின் செய்தி என்றே கூறப்படுகின்றது.

இப்ராஹீம் நபி அவர்கள் தனது புதல்வர் இஸ்மாயில் அவர்களை அறுப்பதாக கனவு கண்டதன் பயனாகவே புதல்வரை அறுக்க முற்பட்டார். அந்த தியாகத்தை நினைவுகூர்ந்தே முஸ்லிம்கள் ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடுகின்றனர்.
அந்த வகையில் தனது உற்ற நண்பர் அபூபக்கர் அவர்களது புதல்வி ஆயிஷாவை திருமணம் செய்ய முகம்மது நபி அவர்கள் கனவு கண்டார்.

முகம்மது நபியின் மனைவி ஆயிஷா அவர்களே அறிவித்தார்கள்; (என்னிடம்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு முறை உன்னை நான் கனவில் கண்டேன். ஒருவர் (உடைய தோற்றத்திலிருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் “இவர் உங்கள் (வருங்கால) மனைவி“ என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான். அப்போது நான் (என் மனத்திற்குள்) “இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலிருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்“ என்று சொல்லிக்கொண்டேன்.

(ஷஹீஹ் புகாரி)

அன்றைய காலகட்டத்தில் பெண்கள் ஒன்பது வயதுக்கு முன்பே பருவமடந்துவிடுவர். அவ்வாறு பருவமடைந்தவுடன் தாமதியாது திருமணம் செய்துகொள்வர். இளவயது அல்லது சிறுவயது திருமணம்தான் அப்போதைய நடைமுறை. இதில் விதிவிலக்கும் இருந்தது.

அதாவது வயது என்ன என்பதைவிட உடல் தோற்றத்தையும், உடல் தகுதியையுமே திருமணத்திற்கான தகுதியாக பார்க்கப்பட்டது.

இன்று உள்ளதுபோன்று G.C.E (O/L), G.C.E (A/L) மற்றும் பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கள் போன்றவற்றுடன், மாடி வீடுகள் கட்டி முடியும் வரைக்கும் அந்த காலத்து பெண்கள் காத்துக்கொண்டிருந்ததில்லை.

அதாவது ஒரு பெண் பருவமடைந்தால் அவள் திருமணம் செய்துகொள்வதற்கு தகுதி பெறுகின்றாள் என்ற சைகையை இறைவன் இயற்கையாக மனிதர்களுக்கு காண்பிக்கின்றான்.

நபி அவர்கள் ஆயிஷாவை ஆறு வயதில் திருமணம் செய்து, அவர் பருவமடைந்த பின்பு ஒன்பது வயதிலேயே இல்லறத்தில் ஈடுபட்டார்கள். ஆயிஷா அவர்கள் அதுவரைக்கும் தனது பெற்றோருடனேயே வாழ்ந்தார்கள்.

இந்த திருமணம் நடைபெற்றபோது மனிதர்களுக்கான திருமணம் பற்றிய சட்டதிட்டங்கள் பூரணமாக இறைவனால் இறக்கப்பட்டிருக்கவில்லை. அதாவது மார்க்கம் பூரனப்படுத்தப்படவில்லை.

நபியின் மனைவி ஆயிஷா அவர்கள் அறிவித்தார்: “எனது தாய் என்னை நபியின் வீட்டுக்கு அனுப்புவதற்காக என்னை கொழுக்க வைக்க நாடினார். ஆனால் வெள்ளரிக்காயும் புதிய பேரிச்சம் பழத்தையும் எனக்கு கொடுக்கும் வரை அவர் விரும்பியவை பயனளிக்கவில்லை. அப்போது நான் நன்கு கொழுத்துவிட்டேன்.”

(அபூ தாவூத்)
தான் பருவம் அடைந்த பின்பு நபியுடன் குடும்ப வாழ்வை மேற்கொள்வதற்கான உடற் தகமையை பெற்றதன் பின்பே நபியுடன் வாழ்க்கையை ஆரம்பித்ததாக ஆயிஷா அவர்களே அறிவித்துள்ளார்கள்.

நபியை பொய்யர், சூனியக்காரர் என்ரெல்லாம் கூறிய அக்கால அரபிகள் மற்றும் யூதர்கள் எவரும் இந்த திருமணத்தை விமர்சித்திருக்கவில்லை. இவ்வாறு திருமணம் செய்வது அக்காலத்து நடைமுறையாகும்.

மேற்கு நாடுகளில் 17 ம் நூற்றாண்டு வரைக்கும் ஏழு வயதில் திருமணம் செய்துகொள்ளும் நடைமுறை இருந்ததற்கான ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
யூத மதத்தில் மூன்று வயது சிறுமிடன் உறவு வைப்பது கூடும் என்றிருந்தது. (Abodah Zarah 37a, Kethuboth 11b,39a Sanhedrin 55b,69a,b Yebamoth 12a,57b,58a,60b) சில நூற்றாண்டுகளுக்கு முன்புதான் இந்த திருமணத்தை யூத அறிஞர்கள் தடைசெய்தனர்.
ஆனால் 1400 வருடங்களுக்கு முன்பே தடை செய்த பெருமை இஸ்லாத்தையே சாரும். பெண்களுக்கு கணவனை தெரிவு செய்தல், விவாகரத்து செய்தல் போன்ற உரிமைகளை 1400 வருடங்களுக்கு முன்பே இஸ்லாம் பெண்களுக்கு வழங்கியுள்ளது.
விடயங்கள் இவ்வாரெல்லாம் இருக்கும்போது திடீரென முகம்மது நபியை குற்றம் சொல்வதற்கான ஆதாரம் எங்கிருந்து பெற்றார்களோ தெரியவில்லை.

எனவே உண்மையை அறிய முற்படாமல் அல்லது ஆழமாக ஆராயாமல் தனிப்பட்ட கோபம், மன உளைச்சல், வெறுப்பு, பொறாமை மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஒரு மதத்தின்மீது வதந்திகளை பரப்புவது பகுத்தறிவுக்கு அப்பால்பட்டதாகும்.

முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :