190 புள்ளிகளை பெற்று கிண்ணியா வலயத்தில் முதலிடம் பெற்ற டாக்டர் முஹம்மட் நசீரின் புதல்வன் அம்மார் செயின்




எதிர்காலத்தில் விஞ்ஞானியாவதே இலக்கு
ஹஸ்பர் ஏ ஹலீம்-
வெளியான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பெறுபேற்றின்படி கிண்ணியா வலயக் கல்வி பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்தானை தி/கிண்/அல் ஹிஜ்ரா கனிஷ்ட வித்தியாலயத்தை சேர்ந்த மொஹமட் நசீர் அம்மார் செயின் எனும் மாணவன் 190 புள்ளிகளை பெற்று கிண்ணியா வலயத்தில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.
எதிர் காலத்தில் விஞ்ஞானியாக ஆக வேண்டும் என்பதே தனது இலட்சியமாகும். எனது புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடையவும் 190 புள்ளிகளைப் பெற பிரதான காரணமாகவும் இருந்த பாடசாலை ஆசிரியரான சீ.எம்.எம்.சமீர் அவர்களுக்கும் நன்றிகளை தெரிவிப்பதோடு பாடசாலையின் அதிபர் பி.அப்துல் றவூப் மற்றும் சக ஆசிரியர்கள் உட்பட தாய் தந்தை அனைவருக்கும் நன்றிகளை தெரிவிக்கிறேன் என மாணவன் அம்மார் செயின் தெரிவித்தார்.
இவர் வைத்தியர் மொஹமட் நசீர் என்பவரின் கனிஷ்ட புதல்வரும் ஆவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :