450 மில்லியன் ரூபா செலவில் நவீன தொழில்நுட்பவியல் பீட கட்டிடம் திறந்து வைப்பு! - பிரதம அதிதி உபவேந்தர் பேராசிரியர் நாஜீம்

சலீம் றமீஸ், எம்.வை.அமீர்-

தென்கிழக்கு பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்திற்கான நவீன வசதிகள் கொண்ட 450 மில்லியன் பெறுமதியான புதிய கட்டிடம் (06) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீடத்தின் பீடாதிபதி கலாநிதி எம்.ஜி.முகம்மட் தாரீக் தலைமையில் நடைபெற்ற இந்த வரலாற்று நிகழ்ச்சியில் தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம்.நாஜீம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இப்புதிய கட்டிடத்தினை திறந்து வைத்தார்.
கடந்த 2016 ஆம் ஆண்டில் உபவேந்தர் பேராசிரியர் நாஜீம் அவர்களது அயராத முயற்சியின் பலனாக இப்பீடம் தற்காலிகமாக ஒலுவில் மஹாபொல பயிற்சி நிலையத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இப்பீடத்திற்கான கட்டிடம் மற்றும் ஏனைய வசதிகளை கருத்தில் கொண்ட உபவேந்தர், புதிய கட்டிடத்திற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கமைவாக தொழில்நுட்பவியல் பீடம் பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டிட தொகுதி 400 ஆசனங்களைக் கொண்ட நவீன கூட்ட மண்டபம், மாணவர்களுக்கான விரிவுரை அறைகள், விரிவுரையாளர்களுக்கனான பிரத்தியோக அறைகள், கணனி மற்றும் ஏனைய ஆய்வுகூடங்கள், களஞ்சிய அறை, சிற்றுண்டிச் சாலை விஷேடமாக மின் பாரம் தூக்கி போன்ற இன்னும் பல வசதிகளைக் கொண்ட பல்கலைக்கழகத்தில் தற்போதுள்ள பீடங்களில் முதன்மை நவீன கட்டிடமாக இது அமையப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் பின்னர் இப்பீடத்தின் சுற்றுப்புறங்களில் மர நடுகை நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது.

இவ் முக்கியத்தவம் வாய்ந்த விழாவில் பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார், நிதியாளர் பஸீலுர் றஹ்மான், பீடாதிபதிகளான கலாநிதி றமீஸ் அபூபக்கர், கலாநிதி எஸ்.குனபாலன், கலாநிதி யு.எல்.செய்னுதீன், கலாநிதி எஸ்.எம்.ஜூனைதீன், கலாநிதி எஸ்.எம்.எம்.மஸாஹிர், நூலகர் எம்.எம்.றிபாய்தீன், தொழில்நுட்பவியல் பீடத்தின் தாவரவியல் தொழில்நுட்பவியல் திணைக்களத்தின் தலைவர் கலாநிதி யு.எல்.அப்துல் மஜீட், தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் திணைக்களத்தின் தலைவர் எம்.கே.றிப்தி, பொறியிலாளர் எம்.எஸ்.எம்.பஸீல், டறின்டன் கட்டிட ஒப்பந்த நிறுவனத்தின் திட்ட முகாமையாளர் பொறியியலாளர் ஏ.எம்.எம்.மனாஸ்; உட்பட பல்கலைக்கழக பேராசிரியர்கள், கலாநிதிகள், விரிவுரையாளர்கள், நிர்வாக அதிகாரிகள், ஊழியர் சங்கத் தலைவர் எம்.எம்.நௌபர் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள், மாணவர்களும் கலந்து சிறப்பித்தனர்.






























இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -