தம்பி தவம் அவர்களே, பதவிக்காக கட்சிவிட்டு கட்சி மாறுபவன் நானில்லை -SSP மஜீட்

பாதையில் போகின்றவர்களுக்கு விசர் பிடித்த நாய்கள் குரைப்பது போன்று எனது சமூகப் பார்வைக்கு தம்பி தவம் விளக்கம் கொடுக்க முற்பட்டிருப்பது சிறு பிள்ளைத்தனமாகப் பார்க்கின்றேன்.

அரசியலிலும் சரி, சமூகப் போராட்டத்திலும் சரி எங்களது பங்களிப்புக்கள் குறித்து இந்த சமூகத்திற்கு நன்கு தெரியும். நீங்கள் எனது சமூகப் பார்வைக்கு மாசு கற்பிக்க முடியாது.

மலையைப் பார்த்து நாய் குரைத்தால் மலை இடிந்து விழாது. விடுதலைப் புலிகளின் பிரச்சினையின் போது முஸ்லிம்கள் பல்வேறுபட்ட துன்பங்களை அனுபவித்த நிலையில் முழுக்கிழக்கு மாகாணத்திற்கும் பாதுகாப்பிற்காக களத்தில் நின்றவர்கள் நாங்கள்தான். உங்களது ஊரையும், உங்களையும் பாதுகாத்தவர்கள்; நாங்கள்தான். தெரிந்தவர்களிடம் கேட்டுப் பாருங்கள்.

பாராளுமன்றக் கதிரைக்காக அலைந்து திரிந்து சமூகத்தைக் காட்டிக்கொடுப்பவர் நானில்லை. அது உங்களைப் போன்றவர்களுக்குத்தான் பொருந்தும். ஐக்கிய தேசியக் கட்சியின் மூலம் அரசியல் முகவரி பெற்ற நான் அந்தக் கட்சியினூடாகவே பாராளுமன்றம் சென்றேன்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சமூகப் போராட்டத்திற்கானது அதனோடு இணைந்து கொள்ளுங்கள் என்ற வேண்டுகோளை ஏற்றுத்தான் அந்தக் கட்சியில் இணைந்து கொண்டேன். கட்சிக்குள் போனதன் பின்புதான் விளங்கியது அது சமூகப் போராட்டத்திற்கானது அல்ல சுயநல அதிகார தரப்பினரின் கூடாரம் என்பது.

பல விடயங்களில் பொறுமை காத்தோம். ஆனால் அழுத்கம விடயத்த்தோடு முஸ்லிம் காங்கிரஸில் இருந்து சமூகத்திற்காக எதையும் செய்ய முடியாது என்பதை மிகத் தெளிவாக விளங்கியதன் பின்புதான் எனது பழைய வீட்டிற்கு திரும்பியுள்ளேன்.

தம்பி தவம் அவர்களே, பதவிக்காக கட்சிவிட்டு கட்சி மாறி இடத்திற்கு இடம் பேச்சுக்களை மாற்றுகின்றவன் நானில்லை. ஆரம்பத்தில் முஸ்லிம் கட்சியோடு சேர்ந்து மேடைகளில் மர்ஹூம் அஸ்ரபிற்கு எதிராக பேசினீர்கள். அதன்பிறகு ஐக்கிய தேசியக் கட்சியில் ஒட்டிக்கொண்டு அமைச்சர் அதாஉல்லாவுக்கு எதிராக பேசினீர்கள்.

அதாஉல்லாவுக்கு அதிகாரம் கிடைத்ததும் அவரோடு ஒட்டிக்கொண்டு சேகு இஸ்ஸதீனுக்கு வசை பாடினீர்கள், இப்படியே அமைச்சர் அதாஉல்லா தனது மகனை அரசியலுக்கு கொண்டு வந்ததால் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதற்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிசாத்தோடு போவதற்கு பேச்சுக்களை நடத்தினீர்கள். அக்கரைப்பற்றில் வை.எல்.எஸ்.ஹமீத்தை அழைத்து வந்து 500 பேருக்கு சாப்பாடு போட்டிர்கள். ரிசாத்துக்கு அம்பாரையில் ஆதரவு இல்லை என்று அறிந்ததும் நேரடியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் சேருவதற்காக அமைச்சர் தயாரத்னாவுக்கு கால்தீன் என்பவர் மூலம் தூது கொடுத்தீர்கள்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் நேரடியாக சேர்ந்து கொள்வதிலும் பிரச்சினை வந்தபோதுதான் முஸ்லிம் காங்கிரஸில் வந்து தஞ்சம் புகுந்தீர்கள். இவ்வாறு அரசியல் வேசைத்தனங்களைப் புரிந்துவிட்டு எங்களைப் பார்த்து உதய கம்மன்விலவுடன் பேசி அரசாங்கத்துடன் இணைந்து முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட முயற்சித்ததாக புதுக்கதையொன்றைக் கூறுகின்றீர்கள். பொய்யைச் சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் தம்பி.

நான் வீதியில் அந்த இந்த வேலை செய்தவன் இல்லை. நாட்டின் கௌரவமான பொலிஸ் துறையில் கடமையாற்றி உயர் பதவி வகித்தவன்.

மற்றவர்களின் பணங்களை சூரையாடி, இலஞ்சம் பெற்று வாழ்ந்தவனல்ல இந்த மஜீத். நேர்மையாக பொலிஸ் துறையில் கடமையாற்றியவன்.
நமது சமூகத்தின் பாதுகாப்புக் கருதி முஸ்லிம் இளைஞர்களை பாதகாப்புத் துறைக்குள் உள்ளீர்த்து அவர்கள் மூலமாக ஒரு சுமுகமான நிலையைக் கொண்டு வந்தது யார்? கிழக்கு மாகாணத்தின் பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்து கொண்டு நாங்கள் செய்த பணிகள் அளப்பரியது.

பிரதேச சபையின் தவிசாளர் பதவி வகித்து மக்கள் பணங்களை நாங்கள் கொள்ளையடிக்கவில்லை. தம்பி தவம் அக்கரைப்பற்றில் உங்களது ஊழல்கள் என்ன என்பது எமக்குத் தெரியாமலில்லை. அது நாறிப்போன விடயம்.

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தை ஆரம்பித்த மர்ஹூம் அஸ்ரபிற்கே கறுப்புக் கொடிகாட்டி கூச்சல் போட்டவர் நீங்கள்தான். அது ஞாபகமில்லையா? பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை தூண்டிவிட்டு பல்கலைக்கழகத்திற்குள் அரசியல்வாதிகள் வரக்கூடாது என்ற கட்டளை போட்டு ஸ்தாபகர் மர்ஹூம் அஸ்ரபின் மனதை நோகடித்தது மட்டுமல்ல பல்கலைக்கழக செயற்பாடுகள் சீர்குழைவதற்கும் தவம்தானே காரணம்.

அக்கரைப்பற்றுக்கு மர்ஹூம் அஸ்ரப் வந்தபோது அவரை வரவிடாமல் தடுப்பதற்கு இளைஞர் கூட்டத்திற்கு தலைமை வகித்து அசிங்கங்களை அரங்கேற்றியதும் இந்தத் தவம்தான்.

இன்றைய முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அக்கரைப்பற்றுக்கு நோன்பு திறக்க வந்தபோது நடு வீதியில் வெறிபிடித்த காடையர் கூட்டத்திற்கு தலைமை தாங்கி டயர்களை எரித்து அவரை வரவிடாமல் தடுத்தது யார்? அதுவும் தவம்தான். என்ன நடந்தது நடு வீதியில் ஹக்கீம் நோன்பு திறந்தார்.

தம்பி தவம் முஸ்லிம் காங்கிரஸில் தஞ்சம் அடைந்த பின்னர் அக்கரைப்பற்றுக்கு ஹக்கீம் வந்தபோது, அமைச்சர் அதாஉல்லா தரப்பு கஞ்சிக்கோப்பைக்குள் மண்ணைப் போட்டபோது அந்தக் கஞ்சிக் கோப்பைகளையும், தவத்தையும் பாதுகாத்தது இந்த மஜீத்தான் என்பதை மறைக்க முடியுமா?

என்ன தண்டனை பார்த்தீர்களா, நோன்போடு விளையாடிய தவத்திற்கு இறைவன் விரைவாகவே தண்டனை வழங்கினான்.

தவம் சொல்லுவது போன்று பதவிக்காக அரசாங்கத்தோடு பேசியது என்றால் இன்று நான் அரசாங்கத்தோடு சேர்ந்திருக்க வேண்டும். இந்த அரசாங்கத்தில் சேர்ந்தால் பதவி கிடைத்திருக்கும்.ஜனாதிபதியின் சகோதரரும், சபாநாயகருமான சமல் ராஜபக்ஸ எனது நெருங்கிய நண்பர். அதனால் அரசுடன் இணைந்து பதவி பெறுவது என்பது சிறிய விடயம்.

ஆனால், பதவிக்காக அலைபவர்கலல்ல நாங்கள். சமூகத்தின் நலனுக்காக சிந்திப்பவர்கள், வேலை செய்பவர்கள். இன்று இந்த அரசாங்கம் செய்யும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளை பார்த்துக் கொண்டு இருக்க முடியாத காரணத்தினால்தான் முஸ்லிம் காங்கிரஸில் இருந்து வெளியேறி எனது பழைய வீட்டுக்கு சென்றுள்ளேன்.

முஸ்லிம் காங்கிரஸில் பதவிக்காகத்தான் தவம் ஒட்டியுள்ளார். தனக்கு பதவிகள் இல்லாதபோது அடுத்த கூடாரத்திற்கு பாய்வதற்கு தவத்திற்கு நேரமாகாது. அவர் பதவிக்காக அலைந்து திரிகின்றார். அப்படிப்பட்ட தவம் எங்கள் மீது குற்றம் சொல்ல வந்துவிட்டார்.சரித்திரமும் தெரியாது, பூகோளமும் தெரியாது அதுதான் எல்லாம்.

தவம் வழங்கிய பதிலுக்கு இதனை கிளிக் செய்யவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :