அன்னையர் தினத்தில் மகளிர் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் புதிய முயற்சி புதிய அலை கலை வட்ட மகளிர் அணி புதிய வேலைத்திட்டம் அறிமுகம்



ர்வதேச அன்னையர் தினத்தை முன்னிட்டு, பெண்களின் கலை, இலக்கிய மற்றும் சமூகப் படைப்பாற்றல்களை ஊக்குவிக்கும் புதிய முயற்சியை “புதிய அலை கலை வட்டம்” அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “வாழும் தெய்வங்களாக உயர்ந்து நிற்கும் அனைத்து அன்னையருக்கும் சர்வதேச அன்னையர் தின நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், மகளிரின் சிந்தனைத் திறன், படைப்பாற்றல் மற்றும் சமூகப் பங்களிப்புகளை மேம்படுத்தும் நோக்கில் புதிய படைப்பாக்க வேலைத்திட்டம் ஒன்றும் ஆரம்பிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ், மகளிர் மேம்பாடு மற்றும் பெண்களின் சமூக வாழ்வு தொடர்பான கதை, கட்டுரை, கவிதை, அனுபவப் பதிவுகள் மற்றும் பெண்களைப் பற்றிய சுவாரசிய தகவல்கள் போன்ற ஆக்கங்களை பெண்கள் எழுதி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இப்பணித் திட்டம் புதிய அலை கலை வட்டத்தின் நிறுவனரும் சிரேஷ்ட பத்திரிகையாளருமான ராதாமேத்தா அவர்களின் வழிகாட்டுதலின் கீழும், முன்னாள் “மித்திரன்” பத்திரிகையின் ஆசிரியையான திருமதி சூரியகுமாரி அவர்களின் ஆலோசனைகளோடும் ஆரம்பிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

படைப்புலத்தில் ஆர்வமுள்ள மகளிர் மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்ளவும், தங்களது ஆக்கங்களை அனுப்பவும் 075 4880172 என்ற வாட்ஸ்அப் இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறும் புதிய அலை கலை வட்ட மகளிர் அணி கேட்டுக் கொண்டுள்ளது.

இந்த முயற்சி பெண்களின் கலை மற்றும் இலக்கியத் திறன்களை வெளிக்கொணரும் சமூகப் பணியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :